Top
undefined
Begin typing your search above and press return to search.

தேச விரோத சட்டத்தை திருத்தும் திட்டம்!

தேச விரோத சட்டத்தை திருத்தும் திட்டம்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  19 July 2018 3:39 AM GMT

இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவை (தேச விரோதம்) திருத்தம் செய்வதற்கு இந்திய சட்ட ஆணையத்தை கேட்டுக் கொள்ளும்படி, தேவையிருந்தால் உரிய யோசனைகளைத் தெரிவிக்கும்படியும் மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்துக்கு எழுதியிருந்தது.
அதையடுத்து, சட்ட ஆணையம் 124ஏ பிரிவை ஆய்வு செய்தது. மேலும் தேச விரோத சட்டத்தின் வரம்பு அமலாக்கம் செய்வது குறித்தும், எந்தச் சூழ்நிலையில் அச்சட்டத்தைப் பயன்படுத்துவது என்பது தொடர்பாகவும் பரிசீலித்தது.
அதன் அடிப்படையில் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு 2018, ஜூன் 26ம் தேதி நடைபெற்ற சட்ட ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி ஆய்வு செய்யவும் முடிவெடுக்கப்பட்டது. அந்த அறிக்கையை சட்ட ஆணையம் இன்னமும் இறுதி செய்யவில்லை.
மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
Next Story