Top
undefined
Begin typing your search above and press return to search.

வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்கள் பி.எஸ்.என்.எல். அறிமுகம்!

வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்கள் பி.எஸ்.என்.எல். அறிமுகம்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  20 July 2018 2:35 AM GMT

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தமிழ்நாடு வட்ட தலைமை பொது மேலாளர் திரு. மார்ஷல் ஆண்டனி லியோ சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
அவரது பேட்டியின் விவரம் வருமாறு:
உண்மையான உலகமயமாக்கல் என்பது தொலைத்தொடர்பு ஊடுருவல் முழுமைப் பெரும்பொழுதே நிகழும். தொலைபேசியும் இன்டர்நெட்டும் இதனை சாமான்ய மக்களுக்கு சாத்தியமாக்கியுள்ளது. இந்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் பி.எஸ்.என்.எல்., 'விங்ஸ்" என்னும் பெயரிலான அதிநவீன அடுத்த தலைமுறை கட்டமைப்பு (என்.ஜி.என்) மூலம் இணைய தொலைபேசி வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
விங்ஸ்:
'விங்ஸ்" என்பது இணைய இணைப்பு மூலம் செல்பேசி / மடிக்கணினி போன்ற கருவிகளில் இருந்து குரல் அழைப்பு விடுக்கும் வசதியைத் தருகிறது. 'விங்ஸ்" ஃபிக்ஸ்ட் மொபைல் டெலிபோன் என்பது செல்பேசி செயலி மூலமாக குரல் அழைப்பு விடுக்கும் வசதியை அளிக்கவல்லது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். கட்டமைப்பிலும், பிற தொலைத் தொடர்பு நிறுவன கட்டமைப்புகளிலும் வரும் அழைப்புகளை மடிக்கணினி / மொபைலில் இருந்து விடுக்கவும் / ஏற்கவும் முடியும். லேண்ட் லைன், செல்பேசி அல்லது பி.எஸ்.என்.எல் விங்ஸ் எண் இவற்றில் எந்த எண்ணுக்கும் அழைப்பு விடுக்க முடியும். 'பாக்கெட் ஸ்விட்சஸ்" என்னும் தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் இருந்து சிம்கார்டு இல்லாமல் செல்பேசி மூலம் அழைப்பு விடுக்க இயலும். 'பி.எஸ்.என்.எல் விங்ஸ்" சேவைக்கு 25.07.2018 முதல் பதிவு செய்து கொள்ளலாம். கணினி/மடிக்கணினி அல்லது செல்பேசி என எந்த சாதனத்திற்கும் 'விங்ஸ்" வசதியை பதிவு செய்து கொள்ளலாம். அறிமுகச் சலுகையாக கவர்ச்சிகர குறைந்த ஆண்டு கட்டணத்துடன் இந்தியாவில் அனைத்து நெட்வொர்க்கிலும் ஆண்டு முழுவதும் இலவசமாக பேசும் வசதியை விங்ஸ் அளிக்கிறது. ஓர் ஆண்டுக்கான கட்டணம் ரூ.1099/- மட்டுமே. bsnl.co.in என்ற ஆன்லைன் போர்டல் மூலம் அல்லது அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் இந்த சேவைக்காக விண்ணப்பத்தை சமர்ப்பித்து கட்டணத்தை செலுத்தலாம்.
'விங்ஸ்" - வாடிக்கையாளர் செயல்படுத்தும் வழிமுறை:-
சேவைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த வாடிக்கையாளருக்கு பத்து இலக்க தனிப்பட்ட எண் ஒதுக்கப்படும். வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு 16 இலக்க ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும். ngn.bsnl.co.in என்ற போர்ட்டலில் லாகின் செய்து 16 இலக்க ரகசிய குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்து படிப்படியான அறிவுறுத்தலின்படி வாடிக்கையாளர்கள், பயனாளர் பெயர், கடவுச்சொல் (பாஸ்வோர்டு) ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளலாம். இப்பொழுது 'விங்ஸ்" சேவை செயல்பாட்டுக்கு வந்துவிடும். இந்த கட்டமைப்புக்குப் பின்னர், சாதனத்தில், செயலி பயன்பாட்டில் உள்ளவர்களுக்கும், இணைய இணைப்பு உள்ளவர்களுக்கும், அழைப்புகள் விடுக்கவும் / பெறவும் முடியும்.
இந்த செயலி பொது மற்றும் தனிப்பட்ட வைஃபை ஹாட்ஸ்பாட்களில் இயங்கும். இந்தியா முழுவதும் முக்கிய சுற்றுலாத்தலங்களில் 25,000 பி.எஸ்.என்.எல். பொது ஹாட்ஸ்பாட்கள் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 500 பொது ஹாட்ஸ்பாட்கள் உள்ளன. குரல் அழைப்பு விடுக்கும் வசதியில்லாத இண்டெர்நெட் வாடிக்கையாளர்களுக்கும் 'விங்ஸ்" சேவை மிகவும் உதவிகரமாக இருக்கும்.
'என்.ஜி.என்" தொழில்நுட்பத்தில் பிற மதிப்புக்கூட்டு சேவைகள்"
'விங்ஸ்"-வுடன் மேலும் நான்கு மதிப்பு கூட்டு சேவைகள் 'என்;.ஜி.என்" தொழில் நுட்பத்தில் உள்ளன.
1. அனைத்திந்திய 'ஐபி சென்ட்ரிக்ஸ்"
நண்பர்கள், குடும்பத்தினர், வணிக உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து, குழு உறுப்பினர்களிடையில், சிக்கனமான மாதாந்திர கட்டணத்தில் அளவற்ற அழைப்புகளை விடுக்கலாம்.
2. மல்டிமீடியா வீடியோ கான்ஃபரன்சிங் :-
அதிகபட்சம் 29 பேர் இணைந்த வீடியோ கான்ஃபரன்சிங் செய்யலாம். பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் இல்லாதவர்களும், கான்ஃபரன்சில் இணைய முடியும்.
3. ஃபிக்சட் மொபைல் கன்வர்ஜன்ஸ்:-
அதிகபட்சமாக 8 சாதனங்களில், பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் / மொபைலில் வரும் அழைப்புகளை ஒரு குறிப்பிட்ட எண்ணில் ஏற்கும் வசதி.
4. ப்ரீபெய்ட் ஃபிக்ஸ்ட் டெலிபோனி:-
லேண்ட்லைன் இணைப்பில் இப்பொழுது ப்ரீபெய்ட் வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது மாதாந்திர கட்டணம் இல்லை. குறைந்த மதிப்பிலான ‘டாப்-அப்” வசதியும் உள்ளது.
கண்ணாடி இழை கேபிளில் அகலக் கற்றை சேவை (எப்டிடிஹெச்) :-
கண்ணாடி இழை கேபிள் மூலம் பி.எஸ்.என்.எல். குறைந்த கட்டணத்தில் அதிவேக டேட்டா சேவை வழங்குகிறது.
விளம்பரச் சலுகையாக இரண்டு புது திட்டங்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ‘ஃபைப்ரோ காம்போ யுஎல்டி 777 ‘திட்டத்தில் 500 ஜி.பி. வரை 50 எம்.பி.பி.எஸ். (mbps) வேகத்திலும் பின்னர் இரண்டு எம்.பி.பி.எஸ். (mbps) வேகத்திலும் கிடைக்கும். குரல் அழைப்புகள் முற்றிலும் இலவசம் இதே போன்று ‘ஃபைப்ரோ காம்போ யுஎல்டி” 1277” திட்டத்தில் 250ஜி.பி. வரை 100 MBPS வேகத்திலும் பின்னர் இரண்டு எம்.பி.பி.எஸ். (mbps) வேகத்திலும் டேட்டா சேவை கிடைக்கும்.
ஜி.பி திட்டங்கள் (அகலக் கற்றை)
அகலகற்றை வாடிக்கையாளர்க்கென ஜி.பி. திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளரின் டேட்டா பயன்பாடு அடிப்படையில் தேவையான திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். வேகம் 20எம்.பி.பி.எஸ். (mbps)
‘பிபிஜி (BBG) காம்போ யுஎல்டி (ULD-45) திட்டத்தில் தினசரி 1.5ஜி.பி. ரூ.99/-மாதக் கட்டணம்
நாள் ஒன்றுக்கு 5ஜி.பி. சேவைக்கு மாதக் கட்டணம் ரூ.199/-
நாள் ஒன்றுக்கு 20ஜி.பி. சேவைக்கு மாதக்கட்டணம் ரூ491/-
இந்த அனைத்து திட்டங்களிலும் குரல் அழைப்புகள் முற்றிலும் இலவசம்
மொபைல்:- 365 நாட்கள் காம்போ STV 1999
பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம், வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாத வகையில், STV 1999 என்ற புதிய சிறப்பு வவுச்சர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது நாள் ஒன்றுக்கு 2ஜி.பி. வீதம் 730 ஜி.பி. டேட்டாவுடன், தினசரி 100 எஸ்.எம்.எஸ்.-களும் அளவற்ற குரல் அழைப்புகளையும் இலவசமாக இந்த சிறப்பு வவுச்சர் அளிக்கிறது.
2 ஜி.பி. கூடுதல் சலுகை:
டேட்டா வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் ரூ 186/429/485/666/999 ஆகிய திட்ட வவுச்சர்களுக்கும் ரூ 187 / 333 / 349 / 444 / 447 ஆகிய சிறப்பு வவுச்சர்களுக்கும் தினசரி கூடுதல் சலுகையாக வவுச்சருக்கு உள்ள டேட்டாவுக்கு மேல் 2 ஜி.பி. கூடுதலாக அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகை 16.08.2018 வரை நடைமுறையில் இருக்கும்.
போஸ்ட் பெய்ட்டில் அளவற்ற டேட்டா :-
பி.எஸ்.என்.எல். போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக அனைத்து போஸ்ட்பெய்டு திட்டங்களிலும் 01.07.2018 முதல் அளவற்ற பதிவிறக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆட்-ஆன் (ADD On) பேக்குகளும் இனி அளவற்ற பதிவிறக்கத்துடன் இருக்கும்.
Next Story