Top
undefined
Begin typing your search above and press return to search.

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  20 July 2018 2:45 AM GMT

சர்வதேச போட்டிகளில் நாட்டுக்காக பதக்கங்கள் வென்று விளையாட்டுகளிலிருந்து ஓய்வுப்பெற்ற சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மத்திய அரசால் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 588 விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெறுவதாக மக்களவையில் இன்று (19.07.2018) எழுத்து மூலம் அளித்த பதிலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் துறை இணையமைச்சர் தனிப்பொறுப்பு) கர்னல் ராஜ்யவர்தன் ராத்தோர் தெரிவித்தார். 1.4.2018 முதல் ஓய்வூதிய விகிதம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
வ. எண்
சிறப்பு மிக்க விளையாட்டு வீரர்களின் வகை
ஓய்வூதிய விகிதம்
(ரூ/மாதம்)
1
ஒலிம்பிக் போட்டிகளில் / மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள்
20,000
2
உலகக்கோப்பை /ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உலக சாம்பியன் பட்ட* தங்கப்பதக்கம் வென்றவர்கள்
16,000
3
ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப்பதக்கம் பெற்றவர்கள்
14,000
4
ஆசிய/ காமன்வெல்த் /பாரா ஆசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றவர்கள்
14,000
5
ஆசிய/ காமன்வெல்த் /பாரா ஆசிய போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றவர்கள்
12,000
* நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக்கோப்பை / உலக சாம்பியன் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள்.
Next Story