Top
undefined
Begin typing your search above and press return to search.

பார்லிமெண்டில் படம் காட்டி பிரான்ஸ் அரசிடம் பல்பு வாங்கிய ராகுல் காந்தி!

பார்லிமெண்டில் படம் காட்டி பிரான்ஸ் அரசிடம் பல்பு வாங்கிய ராகுல் காந்தி!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  21 July 2018 6:50 AM GMT

ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் நேற்று காலை முதல் விவாதம் நடைபெற்றது. இரவு 11 மணி வரை தொடர்ந்து பதினொரு நேரம் நடைபெற்ற விவாதத்திற்கு பிரதமர் மோடி பதில் அளித்து உரை நிகழ்த்தினார்.
இந்த தீர்மானம் குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், "பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தை வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாது என்று எந்த ஒப்பந்தமும் இல்லை என பிரான்ஸ் அதிபரே என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்கிறார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் சொல்லிவிட்டார். இது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். ரஃபேல் ஒப்பந்தத்தால் ஒரு தொழிலதிபர் மட்டும் ₹40,000 கோடி ரூபாய் பெற்று பயன் அடைய வைக்கப்பட்டுள்ளார்" பொய் மூட்டைகளை கட்டவிழ்த்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரான்ஸ் அரசு, "ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தை வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாது. இதில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற ஷரத்து 2008-ல் கையெழுத்திடப்பட்டது தான். ராகுலின் பேச்சு இருநாடுகளின் ரகசிய உடன்படிக்கையை மீறி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மிகவும் ரகசியமானது என்பதால், விமானங்களின் விலை, செயல்பாடு உள்ளிட்ட முழு விவரங்களையும் வெளியிட இயலாது" என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
https://twitter.com/FranceinIndia/status/1020293352485339137
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, ஆளும் மத்திய அரசுக்கு நிர்வாக ரீதியாக அழுத்தம் கொடுத்து, அனைத்து செயல்பாடுகளையும் முடக்க எதிர்கட்சிகள் முயன்று வருவது வெட்டவெளிச்சமாக அம்பலமாகியுள்ளது.
Next Story