Top
undefined
Begin typing your search above and press return to search.

பாவம் செய்த பாதிரியார் : தற்கொலையில் முடிந்த பாவ மன்னிப்பு!

பாவம் செய்த பாதிரியார் : தற்கொலையில் முடிந்த பாவ மன்னிப்பு!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  25 July 2018 5:13 AM GMT

கிறிஸ்துவர்கள், தாங்கள் செய்த பாவங்களில் இருந்து விடுபடவே பாவ மன்னிப்பு கேட்கின்றனர். பாவ மன்னிப்பு கேட்பதன் மூலம், ஏசு பிரான் தாங்கள் செய்த பாவங்களை மன்னித்தருளிகிறார் என்பது கிறிஸ்துவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. பாவ மன்னிப்பு கேட்க வருபவர்களின் பாவங்களை, யாரிடமும் சொல்லாமல், பாதிரியார்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், பெண் ஒருவர், தான் கல்லூரி காலங்களில் செய்த தவறை, பாதிரியார் ஒருவர் வெளியே கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, வேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்த பெண்.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த பெண் லில்லி. இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது லில்லியின் சகோதரி லைலாமா ஜார்ஜ் என்பவர், லில்லியின் தற்கொலை குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. லில்லியின் சகோதரி கூறியதாக அந்த செய்தி குறிப்பில் இடம் பெற்றுள்ளது :
"பாதிரியார் ஒருவரிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன் என் சகோதரி பாவ மன்னிப்பு கோரினார். அவர் கல்லூரியில் படித்த போது ஏற்பட்ட தவறு குறித்த பாவ மன்னிப்பு அது. அந்த தகவலை மற்றொரு பெண்ணிடம் அந்த பாதிரியார் கூறிவிட்டார். அந்த பெண்ணோ பலர் முன்னிலையில் என் சகோதரி குறித்த ரகசியத்தை போட்டு உடைத்து விட்டார்.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு என் சகோதரி தற்கொலை செய்து கொண்டார். அந்த பாதிரியாருக்கும், என் சகோதரியின் கணவருக்கும் முன் விரோதம் உண்டு. இதன் காரணமாகவே, அந்த பாதிரியார் அப்படி செயல்பட்டுள்ளார். இப்பிரச்னையை நாங்கள் விடுவதாக இல்லை. போலீசில் புகார் அளிக்க உள்ளோம்" என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள பாதிரியார்களின் கூட்டு கற்பழிப்பு, காசுக்காக குழந்தைகளை விற்ற அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனம் போன்ற சம்பவங்களை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் வேலூரில், தேவாலயத்தில் இருந்து துப்பாக்கி, வீச்சரிவாள்கள் கைப்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story