Top
undefined
Begin typing your search above and press return to search.

₹4,300 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்களை முடக்கியுள்ளது மத்திய மோடி அரசு!

₹4,300 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்களை முடக்கியுள்ளது மத்திய மோடி அரசு!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  26 July 2018 5:18 AM GMT

Sources : PTI
ஜூன் 30 ஆம் தேதி வரையில், ₹4,300 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பினாமி சொத்துக்களை கண்டறிய பல்வேறு முயர்ச்சிகளை மத்திய அரசு செய்து வருவதாக தெரிவித்த மத்திய அமைச்சர் திரு. சிவ பிரதாப் சுக்லா அவர்கள், 24 பினாமி தடுப்பு குழுக்களை வருமான வரித்துரை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜூன் 30 2018 வரை, ₹4,300 கோடி மதிப்புள்ள, 1600 பினாமி பரிவர்த்தனைகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக சுக்லா தெரிவித்துள்ளார்.
பினாமி தடுப்புச் சட்டம் 2016-இன் படி, பினாமி பரிவர்தனைக்குள்ளாகும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும்.
மேலும், 2017 - 18 ஆம் ஆண்டில், அந்நிய நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரி, ₹27,561 கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய அமைச்சர் சுக்லா தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு ₹24,541 கோடியாக இது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story