Top
undefined
Begin typing your search above and press return to search.

கிராம தலைவர் உட்பட மூன்று பேரை படுகொலை செய்த பசு கடத்துபவர்கள்!

கிராம தலைவர் உட்பட மூன்று பேரை படுகொலை செய்த பசு கடத்துபவர்கள்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  26 July 2018 5:22 AM GMT

Sources : PTI
மேகாலயா மாநிலம், மேற்கு ஜைநிதா மலைப்பகுதியில், கிராம தலைவர் உட்பட மூன்று பேர் பசு கடத்துபவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 6 அன்று, மதியம் 2.30 மணியளவில், கிராம தலைவர் உட்பட ஆறு பேர் தங்களது சொந்த ஊரான அம்லாணிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, தரங்ப்ளாங் என்ற பகுதிக்கு அருகே, ஆறு பேரையும் பசு கடத்தும் கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கிராம தலைவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
மேலும் மூன்று பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்டமாக, முக்கிய குற்றவாளியும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ஜைநிதா மாவட்ட S.P. விவேக் தெரிவித்துள்ளார்.
வங்க தேசத்திற்கு சட்ட விரோதமாக கடத்தவிருந்த பசுக்களை கிராம தலைவரும் மற்றவர்களும் தடுத்து நிறுத்தியாக கூறப்படுகிறது. அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை நிகழ்ந்திருக்க கூடும் என்று சந்தேகிக்கபடுகிறது.
Next Story