Top
undefined
Begin typing your search above and press return to search.

பாவ மன்னிப்பு கேட்கும் முறை சர்ச்சில் இருந்து ஒழிப்பு?

பாவ மன்னிப்பு கேட்கும் முறை சர்ச்சில் இருந்து ஒழிப்பு?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 July 2018 4:41 AM GMT

பாவ மன்னிப்பு கேட்கும் முறை சர்ச்சில் இருந்து ஒழிப்பு..? மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா அதிரடி..!
சர்ச்சுகளில் பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்கும் முறையை ஒழிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
கேரளாவில் ஐந்து பாதிரியார்கள் சேர்ந்து ஒரு திருமணமான பெண்ணை பாலியல் இரையாக்கிய கொடுமையை அடுத்து, தேசிய ஊடகங்களில் இந்த செய்தி வெளியிடப்பட்டது. பிறகு, காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா அவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணையும், மலங்கரா சிரியன் ஆர்த்தொடக்ஸ் தேவாலயத்தின் தலைமை பிஷப், யூஹனோன் கிறிஸ்தோதாமஸ் அவர்களையும் 7 ஜூலை 2018 அன்று சந்தித்து பேசியுள்ளார். பின்னர் விசாரணையை முடித்த தேசிய மகளிர் ஆணையம் தற்போது மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்து அறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா "ஒரு பெண் பாவ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்படி ஒரு பெண்ணால் தன் அந்தரங்க வாழ்கை குறித்து பாதிரியாரிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும். பாவ மன்னிப்பு பெண்களை மட்டும் பாதிக்காது ஆண்களின் வாழ்கையையும் பாதிக்கும். பாவ மன்னிப்பை தவறாக பயன்படுத்தி மிரட்டும் சூழ்நிலை ஆண்களுக்கும் நேரலாம். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பாதிரியார்கள், ஆண்களிடம் இருந்து பணம் பறிப்பார்கள். மதநம்பிக்கைகள் பெண்களின் பாதுகாப்புக்கு எதிராக செல்லும் பட்சத்தில் அதில் நிச்சயம் மாற்றம் மேற்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக ஒரு ஆணுக்கு முன்பு பாவ மன்னிப்பு என்பது கூடவே கூடாது. எனவே, பாவ மன்னிப்பு கேட்கும் முறையை சர்ச்சில் இருந்து ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
Next Story