Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆசியாவின் மகசேசே பரிசுக்கு இரு இந்தியர்கள் தேர்வு..!!

ஆசியாவின் மகசேசே பரிசுக்கு இரு இந்தியர்கள் தேர்வு..!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 July 2018 4:05 PM GMT

ஆசியாவின் பெருமைக்குரிய விருதான மகசேசே இந்த ஆண்டு இரண்டு இந்தியர்களுக்குக் கிடைத்துள்ளது.



ரமோன் மக்சேசே விருது (Ramon Magsaysay Award) ராக்பெல்லர் சகோதரர்கள் நிதியம் (RBF) பொறுப்பாளர்களால் ஏப்ரல் 1957இல் நிறுவப்பட்டது. பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மக்சேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றை வளரும் நாடுகளில் பரப்பவும் இப்பரிசு ஏற்படுத்தப்பட்டது. இது ஆசியாவின் நோபல் பரிசு என அறியப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ரமோன் மக்சேசே விருது நிறுவனம் ஆசியாவில் தங்கள் துறையில் சிறந்து விளங்கும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பரிசு வழங்கி வருகிறது. ஆறு வகைகளில் இப்பரிசு வழங்கப்படுகிறது. ஆசியாவில் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்த விருது அரசு சேவை, பொது சேவை, சமூக தலைமை, சர்வதேச உறவு, பத்திரிக்கை இயல், இலக்கியம் படைப்புகளை எழுதும் தலைமை ஆகியோர்களுக்கு வழங்கப்படுகிறது.


பெருமைக்குரிய இந்த விருது, இந்த ஆண்டு இரண்டு இந்தியர்களுக்குக் கிடைத்துள்ளது. மனரீதியாக பாதிக்கப்பட்டோருக்கு சிறந்த சேவை செய்து வரும் பாரத் வாத்வானிக்கு மகசேசே விருது அளிக்கப்படுகிறது. இதே போன்று பின்தங்கிய பகுதி மக்களுக்கு கல்வி சேவை அளித்து வரும் சோனம்வான்சக்கிற்கும் மகசேசே விருது அளிக்கப்பட உள்ளது. இவர்களைத் தவிர்த்து மேலும் 4 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் மகசேசே விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது வழங்கும் விழா பிலிப்பைன்ஸ் நாட்டில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெற உள்ளது.
Next Story