Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜியோ இன்ஸ்டிட்டியூட்டுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதற்கான சிபாரிசு கடிதம் மட்டுமே சமர்பிக்கப்பட்டுள்ளது : ஜவடேகர் விளக்கம்

ஜியோ இன்ஸ்டிட்டியூட்டுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதற்கான சிபாரிசு கடிதம் மட்டுமே சமர்பிக்கப்பட்டுள்ளது : ஜவடேகர் விளக்கம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 July 2018 3:46 PM GMT

நாட்டில் இருக்கும் குறிப்பிட்ட சில கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து அவற்றுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படும் என்றும், இந்த நடவடிக்கையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு பெரும் நிதி ஒதுக்கப்படும் என்றும் சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. உலகதரத்துக்கு இந்திய கல்வி நிறுவனங்களை உயர்த்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, சில வாரங்களுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.
அதில், பெங்களூரு ஐஐஎஸ், டெல்லி ஐஐடி மற்றும் பாம்பே ஐஐடி ஆகிய கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றன. மேலும், இன்னும் ஆரம்பிக்கவேப்படாத ஜியோ இன்ஸ்டிட்டியூட்டும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டது. இந்த முடிவு எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இது குறித்து விளக்கமளித்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘ஜியோ இன்ஸ்டிட்டியூட்டுக்கு இன்னும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. அப்படி கொடுப்பதற்கன சிபாரிசு கடிதம் மட்டுமே சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை துறை சார்ந்த வல்லுநர்கள் பலகட்ட ஆய்வுகளுக்குப் பின்னரே தேர்வு செய்தனர். பிலானியில் இருக்கும் பிர்லா இன்ஸ்டிட்டியூட், உயர்கல்விக்கான மணிபால் அகாடமி ஆகிய கல்வி நிறுவனங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன’ என்றார்.


முன்னதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ‘‘தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் மூன்று அரசு சார்ந்த நிறுவனமும், மூன்று தனியார் நிறுவனங்களும் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தனியார் நிறுவனங்களில் ஒன்று ‘கிரீன்பீல்டு’ திட்டத்தின் கீழ் தேர்வு செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிரீன்பீல்டு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் பல நிறுவனங்கள் விண்ணப்பித்தன. பேப்பர் அளவில் உள்ள 11 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அதில் ஜியோ நிறுவனத்தின் செயல் திட்டம் ஏற்புடையதாகவும், சிறப்பாகவும் இருந்ததது. அதன் அடிப்படையிலேயே நாட்டின் மிகச்சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ இன்ஸ்ட்டியூட் தேர்வு செய்யப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source & Pic Courtesy : NDTV
Next Story