Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடிக்கு ஆப்ரிக்காவில் குவியும் பாராட்டுகள் !

பிரதமர் மோடிக்கு ஆப்ரிக்காவில் குவியும் பாராட்டுகள் !

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  28 July 2018 4:03 PM GMT

உகாண்டா குடியரசின் அதிபர் மாண்புமிகு யோவேரி காகுடா முசவேணி அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி உகாண்டாவில் 2018 ஜூலை 24,25 தேதிகளில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அவருடன் மத்திய அரசின் உயர்நிலை அதிகாரிகள், வர்த்தகர்கள் கொண்ட உயர்நிலைக் குழு சென்றிருந்தது. கடந்த 21 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் உகாண்டாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
உகாண்டா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உயர்நிலை பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. தமது பயணத்தின் போது பிரதமர் 2018 ஜூலை 24-ந் தேதி புதன்கிழமை அன்று அரசு இல்லமான என்டெப்பியில் அதிபர் முசவேணியுடன் இருதரப்பு பேச்சுகளை நடத்தினார். அதிபர் முசவேணி பிரதமரை கவுரவித்து அரசு முறை விருந்தளித்தார்.
உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை இந்தியாவிலும் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. உகாண்டா நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் ஒருவர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். உகாண்டா தனியார் துறை நிறுவனம் மற்றும் இந்திய தொழில்கள் இணையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டு வர்த்தக நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் உரையாற்றினார்கள். உகாண்டாவில் உள்ள இந்திய சமுதாயத்தினர் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

தனது விவாதங்களின் போது பிரதமர் திரு. மோடியும், அதிபர் முசவேணியும் இந்தியாவுக்கும், உகாண்டாவுக்கும் நிலவி வரும் பாரம்பரியமான, நெருங்கிய நல்லுறவுகள் பற்றிக் குறிப்பிட்டனர். இரு தரப்பு உறவுகளுக்கு பிரமாதமான வாய்ப்புகள் உள்ளன என்று இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். அரசியல் பொருளாதார, வர்த்தக, பாதுகாப்பு, தொழில்நுட்ப, கல்வி, அறிவியல், பண்பாட்டுத் துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான தங்களது விருப்பங்களை உறுதி செய்தனர். உகாண்டாவின் தேசிய மேம்பாட்டுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் 30 ஆயிரம் பேர் கொண்ட இந்திய வம்சாவளியினர் ஆற்றி வரும் பங்கினை அதிபர் முசவேணி பாராட்டினார். மண்டலத்தில் பொருளாதார ஒருங்கிணைப்புக்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை பராமரிப்புக்கும் உகாண்டா ஆற்றி வரும் குறிப்பிடத்தக்க பங்கு பணிக்கு இந்தியா பாராட்டுத் தெரிவித்தது.
Next Story