Top
undefined
Begin typing your search above and press return to search.

தகவல் திருட்டிலிருந்து சிறார்களுக்கு பாதுகாப்பு : ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி பரிந்துரை

தகவல் திருட்டிலிருந்து சிறார்களுக்கு பாதுகாப்பு : ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி பரிந்துரை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  30 July 2018 7:06 PM GMT

ஆன்லைனில் சிறார்களின் தனிப்பட்ட விவரங்களை திரட்டுவது, அதன் அடிப்படையில் இலக்குவைத்து விளம்பரங்கள் செய்வது போன்றவற்றை தடுக்க வேண்டும் என ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கணினி அல்லது செல்பேசியில் இலவச செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்கிறபோது, விதிகள் மற்றும் நிபந்தனைகளை வாசிக்காமல் கேட்கப்படுகிற எல்லா இடங்களிலும் "ஒகே" என்ற பொத்தானை அழுத்திவிடுகிறோம். இந்த செயலி நம்முடைய செல்பேசி தொடர்பு எண்களை, புகைப்படங்களை பயன்படுத்த அல்லது குறுஞ்செய்திகளை வாசிக்க முடியும் என்பதையும், அதிலிருக்கும் தரவுகளை தங்களுடைய நிதி ஆதாயங்களுக்காக இந்த செயலியின் நிறுவனம் பயன்படுத்த முடியும் என்பதையும் உணர்கின்றோமா?
இந்த செயலி நிறுவனம் நம்முடைய தரவுகளை எத்தகைய மூன்றாம் தரப்பு நிறுவனத்திற்கு அளிக்க இருக்கிறது, பகிரப்படும் தரவுகள் எவ்விதமாக பயன்படுத்தப்படும் என்று உங்களிடம் தெரிவிக்கப்படுகிறதா? எதுவும் இல்லை என்பதே உண்மை. இதனை தடுக்கும் வகையில் ஆன்லைனில் சிறார்களின் தனிப்பட்ட விவரங்களை திரட்டுவது, அதன் அடிப்படையில் இலக்குவைத்து விளம்பரங்கள் செய்வது போன்றவற்றை தடுக்க வேண்டும் என ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஆன்லைனில் சிறார்களின் தனிப்பட்ட விவரங்களை திரட்டுவதை தடுக்க வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டால், ஃபேஸ்புக், யுடியூப் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் சிறார்களின் ஆன்லைன் அந்தரங்க பாதுகாப்பு சட்டம், 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த நடைமுறையைத் தான் ஃபேஸ்புக், யுடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை இந்தியாவில் பின்பற்றுகின்றன. 13 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் சைன்-இன் செய்வதை அனுமதித்தாலும் கூட, அதற்கான நிபந்தனைகளை ஏற்பதாக அவர்கள் ஒப்புக்கொள்வது இந்திய சட்டப்படி செல்லாது.
Next Story