Top
undefined
Begin typing your search above and press return to search.

கருணாநிதியின் உடல் நிலை முன்னேற பிரார்த்தனை செய்ய கூடாது : தி.க வீரமணி அறிக்கை

கருணாநிதியின் உடல் நிலை முன்னேற பிரார்த்தனை செய்ய கூடாது : தி.க வீரமணி அறிக்கை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  30 July 2018 7:20 PM GMT

சுயமரியாதைக்காரரான கலைஞர் திரு. கருணாநிதி  அவர்கள் உடல்நலம் பெற பிரார்த்தனை என்பது போன்ற மூடநம்பிக்கைகளில் தி.மு.க.வினர் ஈடுபடவேண்டாம் என திராவிடர் கழக தலைவர் திரு. கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளதாக நியூஸ் 7 செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

தி.மு.க தலைவர் கலைஞர் திரு. கருணாநிதி அவர்கள் உடல் நலம் சரி இல்லாமல் ஆல்வார்ப்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவுள் மறுப்பு கொள்கைகளை கடை பிடித்து வந்த கருணாநிதி அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நலம் பெற வேண்டி, கட்சி தொண்டர்கள் கோவில்களில் விளக்கு பூஜைகள், மொட்டை அடித்து பிரார்த்தனை போன்ற வேண்டுதல்களை செய்து வருகின்றனர். இதை சகித்துக்கொள்ள முடியாமல் திராவிடர் கழக தலைவர் திரு. வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதியை மதிப்பது என்பது அவர் கட்டிக் காத்து வந்த, பின்பற்றி வந்த கொள்கையை மதிப்பது தான் என குறிப்பிட்டுள்ளார்.  பகுத்தறிவு இயக்கமான தி.மு.கவின் கொள்கைகள், விழைவுகளுக்கு முற்றிலும் மாறான செயல்களில் தெரிந்தோ, தெரியாமலோ யாரும் ஈடுபட்டு விடக்கூடாது என வலியுறுத்தி உள்ள வீரமணி, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நிகழ்ந்த மூடநம்பிக்கைக் கூத்துக்கள் தி.மு.க.விலும் நுழைந்து விட கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை முன்பு யாரோ ஒருவர் பூசணிக்காய் சுற்றி படைத்ததைத் தொலைக்காட்சியில் கண்டு வேதனை அடைந்ததாகவும் , கொள்கை உணர்வுகளை எதிரிகள் கொச்சைப்படுத்திட ஒருபோதும் இடம் தந்துவிடக் கூடாது  என்றும் வீரமணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதனை தொடர்ந்து, தி.மு.க தொண்டர்களிடையே இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க வினரின் மத உணர்வுகளையும், கலைஞர் மீது தொண்டர்கள் வைத்துள்ள அன்பையும் வீரமணி அவர்கள் கொச்சை படுத்திவிட்டதாக கருதப்படுகிறது.

Next Story