Top
undefined
Begin typing your search above and press return to search.

5 ஆண்டுகள் வரை ஒட்டுமொத்தமாக வாகன காப்பீடு எடுக்கும் முறை அமலுக்கு வர இருக்கிறது

5 ஆண்டுகள் வரை ஒட்டுமொத்தமாக வாகன காப்பீடு எடுக்கும் முறை அமலுக்கு வர இருக்கிறது

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  30 July 2018 6:42 PM GMT

கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயமாகிறது. இதனால் புதிய வாகனங்களை வாங்கும்போது ஒரு ஆண்டுக்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டை, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும்.
சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு அவசியமானது. பொதுவாக, மோட்டார் வாகன இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகள் ஓர் ஆண்டு செல்லத்தக்க கால அளவை கொண்டிருக்கும். ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டியது அவசியம். இரண்டு வகையான வாகன காப்பீட்டு திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன.
முதலாவது, மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம், இரண்டாவது, ஒருங்கிணைந்த வாகன காப்பீட்டுத் திட்டம். இதில், மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம் அவசியமானது. ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டமானது ஒட்டுமொத்த இழப்பீடுகளை பெற வழி வகை உள்ளதால் அவசர சமயங்களில் மிகுந்த உதவிகரமாக இருக்கும்.
தற்போது ஒரு ஆண்டுக்கு பதிலாக 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஒட்டுமொத்தமாக காப்பீடு எடுக்கும் முறை அமலுக்கு வர இருக்கிறது. கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் காப்பீடு வழங்கப்படும். கடந்த ஆண்டில் மூன்றாம் நபர் காப்பீட்டை ஆன்லைன் மூலம் வழங்கலாம் என்றும், காப்பீட்டு காலத்தை 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை நீட்டிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில் விதிமுறைகளை வகுத்துவரும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், ஒரு மாதத்திற்குள் இறுதி முடிவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
Next Story