Top
undefined
Begin typing your search above and press return to search.

உலகின் இரண்டாவது பெரிய மொபைல் ஃபோன் உற்பத்தி நாடாக விளங்குகிறது இந்தியா..!!

உலகின் இரண்டாவது பெரிய மொபைல் ஃபோன் உற்பத்தி நாடாக விளங்குகிறது இந்தியா..!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  31 July 2018 7:06 PM GMT

உத்தர பிரதேச மாநிலத்தில் ரூ. 60,000 கோடி மொத்த முதலீட்டுடன் கூடிய 81 திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அதனை தொடந்து பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினர்.
அப்போது அவர் பேசுகையில், மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்கவும், மாநிலத்தை தொழில்மயமாக்கவும், 2018 ஃபிப்ரவரி மாதம் நடைபெற்ற உத்தரப் பிரதேச முதலீட்டாளர் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு இந்த திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கன மழை பற்றி பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். இதனால் உருவாகியுள்ள சூழலை மத்திய அரசு கண்காணித்து வருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளிக்க மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கிராமப் புறங்களில் பரவியுள்ள மூன்று லட்சம் பொது சேவை மையங்கள் கிராமங்களில் வாழ்க்கையில் சிறந்த மற்றும் வெளிப்படையான சேவைகளின் மூலம் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். மத்திய அரசு தடைகற்களை உடைத்தெறிந்து தீர்வுகள் மற்றும் ஒத்திசைவில் கண்ணோட்டம் செலுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். உலகின் இரண்டாவது பெரிய மொபைல் ஃபோன் உற்பத்தி நாடாக இந்தியா திகழ்வதாக கூறிய அவர், இந்த உற்பத்தி புரட்சியில் உத்தர பிரதேசம் முன்னிலை வகித்து வருகிறது என அவர் கூறினார்.
உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவடையும்போது, இந்தியாவில் வர்த்தகம் செய்வது மேலும் எளிதாகி, சரக்கு போக்குவரத்திற்கான செலவு குறையும் என பிரதமர் தெரிவித்தார். தொழில்முனைவோர் மற்றும் வணிகர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கி நகர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் மின் விநியோகத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் விளக்கினார். பாரம்பரிய எரிசக்தியிலிருந்து பசுமை எரிசக்தியை நோக்கி நாடு முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். சூரிய மின்சக்தியின் தொகுப்பாக உத்தரப் பிரதேசம் ஆகும் எனவும் அவர் தெரிவித்தார். 2013-14ல் 4.2 சதவீதமாக இருந்த இந்தியாவின் எரிசக்தி பற்றாக்குறை இன்று ஒரு சதவீதத்திற்கும் குறைவாக குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
Next Story