Top
undefined
Begin typing your search above and press return to search.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்புகளை வழங்கி மத்திய அரசு சாதனை

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்புகளை வழங்கி மத்திய அரசு சாதனை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  5 Aug 2018 3:08 PM GMT




2016 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி முதல், பிரதான் மந்திரி உஜ்ஜுவலா யோஜனாவை (P.M.U.Y) அறிமுகப்படுத்தி, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அதை செயல்படுத்தி வருகிறது. P.M.U.Y மூலம் 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் 5 கோடி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 28 மாதங்கலிலேயே 5 கோடி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு எல்.பி.ஜி இணைப்புகளை வழங்கி ஆரம்ப இலக்கை அடைந்தது மத்திய அரசு.


நடப்பு ஆண்டில், திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியை கருத்தில் கொண்டு, ₹12,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 8 கோடி இணைப்புகள் வழங்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கம் (67 லட்சம்), பீகார் (61 லட்சம்), மத்தியப் பிரதேசம் (45 லட்சம்), ராஜஸ்தான் (37 லட்சம்), ஒடிஷா (30 லட்சம்) ஆகியவை இதில் அடக்கம் . இதில் 47% பயனாளிகள் சமுதாயத்தின் பலவீனமான பிரிவுகளாக இருக்கும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினர். உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த திட்டத்தை அங்கீகரிதுள்ளது.



PMUY திட்டம் வறிய குடும்பங்களுக்கு சுத்திகரிப்பு சமையல் எரிபொருளை வழங்கும் நோக்கம் கொண்டது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் PMUY செயல்படுத்தப்படுகிறது.


Based on Inputs from Business Standards




Next Story