Top
undefined
Begin typing your search above and press return to search.

சினிமா காட்சியை போல் ஆட்டோவில் துரத்தி சென்று, கடத்தப்பட்ட சிலையை மீட்ட பொன் மாணிக்கவேல் குழுவினர்

சினிமா காட்சியை போல் ஆட்டோவில் துரத்தி சென்று, கடத்தப்பட்ட சிலையை மீட்ட பொன் மாணிக்கவேல் குழுவினர்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  7 Aug 2018 5:13 AM GMT

File Picture
சென்னை அருகே போரூரில் காரில் கடத்தி செல்லப்பட்ட ஐம்பொன் சிலையை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு சினிமா பாணியில் ஆட்டோவில் விரட்டிச் சென்று மீட்டுள்ளதாக நியூஸ் 7 செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

ரகசிய தகவலின் அடிப்படையில் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தனது குழுவுடன் 3 ஆட்டோக்களில் போரூர் அருகே காரம்பாக்கத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு காரை ஆட்டோவில் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். அப்போது, அந்த காரில் சோதனை செய்த போது ஒன்றே முக்கால் அடியுள்ள 20 கிலோ எடையுள்ள அம்மன் ஐம்பொன் சிலையை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலையை 50 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய காரில் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. பிறகு, 4 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Next Story