Top
undefined
Begin typing your search above and press return to search.

சட்ட விரோதமாக நடந்து வந்த மாட்டிறைச்சி கூடத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த செய்தியாளர் கடுமையாக தாக்கு : கர்நாடகாவில் பயங்கரம்

சட்ட விரோதமாக நடந்து வந்த மாட்டிறைச்சி கூடத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த செய்தியாளர் கடுமையாக தாக்கு : கர்நாடகாவில் பயங்கரம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  13 Aug 2018 5:47 AM GMT




கர்நாடக மாநிலத்தில் ராமநகர் மாவட்டத்தில் உள்ள கொடியபியா கிராமத்தில் சட்டவிரோதமாக 200 கன்றுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளன. குடூர் காவல்துறையினரும், விலங்குகள் நல ஆர்வலர்களும் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று சோதனையிட்டனர். இந்தியா டுடே நிருபர் சம்பவ இடத்தில் இருந்து முழு சம்பவத்தையும் படம்பிடித்தார். மாட்டிறைச்சி கூடத்திற்குள் நுழைவதற்கு விலங்கு ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பீ) முதலில் மறுத்துவிட்டார். போதிய காவலர்கள் இல்லாமல் மாட்டிறைச்சி கூடத்திற்குள் நுழைந்தால் 'சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை' சீர்குலையும் என்று அவர் கூறினார். மறு நாள் ஆய்விற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அவர் உறுதிபடுத்தினார்.



ஆய்வு நடத்தப்பட்ட நாளன்று, இரண்டு ஆயுதம் ஏந்தாத காவல்துறையினர் பாதுகாப்புடன் விலங்குகள் நல ஆர்வலர் ஜோஷின் அந்தோனி மற்றும் இந்தியா டுடே நிருபர் ஆகியோர் மாட்டிறைச்சி கூடத்திற்கு சென்றனர். மாட்டிறைச்சி கூடத்திற்குள் நுழைகையில், எலும்புகள், மண்டையோடுகள், கன்றுகுட்டி குடல்கள் ஆகியவை இரத்தத்துடன்  தரையில் கிடந்தன.


கடுமையான தேடுதல் வேட்டைக்கு பின்னர்,  கடைசியில் தாழ்ந்த மரங்கள் மற்றும் அடர்த்தியான புதர்களுக்குள்ளே கன்றுகள் மறைக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டன. கன்றுகளின் முகங்கள், அவற்றின் கால்களுடன் சேர்த்து கட்டி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 71 கன்றுகள் மீட்கப்பட்டன.



[caption id="attachment_2445" align="alignnone" width="300"]
Image by India Today. Calf tied under plants in the slaughter house[/caption]

கன்றுக்குட்டி மீட்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாத கும்பல் ஒன்று, இந்தியா டுடே செய்தியாளரை சரமாரியாக தாக்கினர். செய்தியாளர் மீது கற்களை எரிந்து அவரை படுகாயம் அடைய செய்தனர். செய்தியாளரின் கைபேசியை தூள் தூளாக உடைத்தனர். பிறகு காவல் துறையினரின் முன்னிலையிலேயே அவரை மிரட்டினர்.



பிறகு காவல் துறை இது தொடர்பாக FIR பதிவு செய்து விசாரித்து வருகிறது. கசிப்பீர், காஸி, சையத், முபாரகான், நூர், இம்தியாஸ் மற்றும் தபிரேஸ் ஆகியோர் மீது IPC 428 மற்றும் 429 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் செய்தியாளரை தாக்கியது தொடர்பாக எந்த வழக்கும் பதியப்படவில்லை.






Next Story