Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கும் மத்திய மோடி அரசு

தமிழகத்தில் நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கும் மத்திய மோடி அரசு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  13 Aug 2018 1:32 PM GMT

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்வளத்தை அதிகரிப்பதற்கு பாலாறு மற்றும் பெண்ணையாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு, பெண்ணையாறு ஆகியவை வங்கக்கடலில் சங்கமிக்கின்றன. கடலில் வீணாகும் நீரை திசைதிருப்பி பயன்படுத்த ஆறு ஆண்டுகளாக ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வுகளுக்குப் பின்னர் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு பாலாறு - பெண்ணை யாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி பரிந்துரை செய்து, அறிக்கையை அளித்துள்ளது.
காங்கிரஸ் கிடப்பில் போட்டதை நிறைவேற்றிய பாஜக அரசு: 
நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது குறித்து ஆராய உயர்நிலைக் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 2012-இல் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் முந்தைய காங்கிரஸ் அரசால் உயர்நிலைக் குழு கூட  அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கடந்த  (15/11/2016) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நதிகள் இணைப்பு தொடர்பாக ஆராய உயர்நிலைக் குழுவை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தக் குழுவில் நீர்வளத்துறை, சுற்றுச்சூழல், வனத்துறையைச் சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள். நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் பணி தொடர்பான தகவல், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இக்குழுவினர் மத்திய அரசுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை அளிப்பார்கள். அதன்படி, மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும். நாட்டின் நலன்கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னணி:
நதிகளை இணைப்பது குறித்து வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், 1983ஆம் ஆண்டு நதிகள் இணைப்பு தொடர்பாக பொதுநல வழக்கு தொடுத்தார். 27/2/2012 அன்று உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் நதிநீர் இணைப்பு குறித்து விரிவான தீர்ப்பை வழங்கியது.
நதிகள் அனைத்தையும் தேசியமயமாக்க வேண்டும். தேசிய நதிகளை ஒன்றாக இணைக்க வேண்டும். இந்தியாவைப் பொருத்தவரையில் ஓர் இடத்தில் வெள்ளமும் ஓர் இடத்தில் வறட்சியும் உள்ளது. மழை, வெள்ளத்தின் நதிநீர் பெரும்பாலும் வீணாகக் கடலில் கலக்கிறது. எனவே, நதிகளை இணைத்து சமன்படுத்தினால் நதிநீர் வீணாகாது.
மேலும் நதிகளை இணைப்பதால் எல்லோருக்கும் பொதுவானதாகி அனைவரும் பயன்பெறுவர். தனியாக யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பது நதிநீர் இணைப்பால் விளையும் பயன் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெண்ணையாறு - பாலாறு இணைப்பு திட்டம்:
இந்த திட்டத்தில், பெண்ணையாற்றின் உபரி நீரை, பாலாற்று கிளை ஆறான செய்யாற்றிற்கு, கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. சாத்தனூர் அணை முழுநீர்மட்ட அளவில், தலை மதகிலிருந்து, 23.55 கி.மீ., நீளத்துக்கு, இணைப்பு கால்வாய் வெட்டி, செய்யாற்றில் உள்ள ஆலத்தூர் அணையின் மேற்புறம் இணைக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த இணைப்பு கால்வாயிலிருந்து, 38.72 கி.மீ., நீளத்துக்கு, வரத்து கால்வாய் அமைத்து, துரிஞ்சலாற்றுடன் இணைத்து, நந்தன் வாய்காலுக்கு, தண்ணீர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டம் நிறைவேறினால், 5.69 டி.எம்.சி., உபரி நீர், பாலாறு வடி நிலத்திற்கு திருப்பப்படும். இதன் மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, போளூர், வந்தவாசி வட்டங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ஆகியவற்றில், சுமார், 46 ஆயிரத்து, 69 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதிபெறும் என்று, பொதுப்பணித்துறை மதிப்பிட்டு உள்ளது. திட்டத்தின் நேரடி பயன்கள் இவை. இது தவிர, இந்த பகுதியைச் சுற்றிலும் உள்ள நில பரப்பில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் வாய்ப்பு உள்ளதால் பலன் மேலும் அதிகரிக்கும்.
அரசின் இறுதி கட்ட முடிவு:
கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு, பெண்ணாறு ஆகியவை வங்கக் கடலில் போய் சங்கமிக்கின்றன. கடலில் வீணாகும் நீரை திசைதிருப்பி பயன்படுத்த 6 ஆண்டுகளாக நடத்திய ஆய்வுகளுக்குப் பின் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் பாலாறு -பெண்ணையாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து, அறிக்கையை அளித்துள்ளது.
இதற்காக 648 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் நிறைவேற்றப்பட மத்திய அரசு தேசிய நீர்வள ஆணையத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பாலாறு 50 குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாக உள்ளது. தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளும் இதில் உள்ளடக்கம். இத்திட்டத்தின் மூலம் வெள்ளப் பெருக்கு காலங்களில் பெண்ணையாற்றில் இருந்து 3 டிஎம்சி உபரி நீர் பாலாற்றில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இணைப்புக் கால்வாய் வழியாக திருப்பி விடப்படும். இத்திட்டத்தால் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு குடிநீர் வசதி மற்றும் 9.850 ஹெக்டர் நிலங்களுக்கு நீர் பாசன வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story