Top
undefined
Begin typing your search above and press return to search.

வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து எம்.பி

வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து எம்.பி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  15 Aug 2018 6:13 AM GMT

பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் கட்சி, 116 இடங்களில் வெற்றி பெற்று, வரும் 18ம் தேதி பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கவுள்ளார்.
இதில் அந்நாட்டு எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மகேஷ்குமார் மலானி, தர்பார்கர்-2 தொகுதியில் வெற்றி பெற்று முதல் இந்து மதத்தைச் சேர்ந்த எம்.பி.யாக பாக். பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1 லட்சத்து 6 ஆயிரத்து 630 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.இத்தொகுதி தனித்தொகுதி என்பதால் இவர் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து மகேஷ்குமார் கூறுகையில், இத்தொகுதியி்ல் 5 சதவீத இந்துக்களே உள்ளனர். எனினும் கட்சி சார்பில் போட்டியிட்டதால் மத ரீதியில் என்னை பிரித்து பார்க்காமல் எனக்கு முஸ்லிம்களும் ஓட்டளித்தனர் என்றார். இதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் அல்லாத எம்.பி. இவர் தான் என கூறப்படுகிறது.
Next Story