Top
undefined
Begin typing your search above and press return to search.

இரவில் தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரிகளை அடித்தே கொன்ற கொடூரம் : உத்தர பிரதேசத்தில் பயங்கரம்

இரவில் தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரிகளை அடித்தே கொன்ற கொடூரம் : உத்தர பிரதேசத்தில் பயங்கரம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  15 Aug 2018 6:32 AM GMT

Based on Inputs From Swarajya English
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் கோவில் பூசாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஷிபுப்புர் சத்கானா கிராம பஞ்சாயத்தில் உள்ள மில்லி மற்றும் பிஜோலி கிராமங்களுக்கிடையே உள்ள ஒரு சிவன் ஆலயத்தில் நடந்துள்ளது. தலைமை பூசாரி காளிதாஸ் மற்றும் பூசாரி சோன்பால் ஆகியோர் கடந்த 20-25 ஆண்டுகளாக இந்த கோவிலில் வாழ்ந்து வருகின்றனர். பூசாரிகள் மகேந்தி
ரா, சோன்பால் மற்றும் காளிதாஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு கோவிலுக்கு மேலே கட்டப்பட்டடுள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இரவில் அடையாளம் தெரியாத ஆண்கள் கோவிலின் சுவர் மீது ஏறி அறைக்குள் நுழைந்தனர். கட்டைகள் மற்றும் செங்கற்கள் மூலம் பூசாரிகளை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளனர்.

பூசாரிகள் உதவிக்காக அழுதார்கள், ஆனால் தகுந்த நேரத்திற்குள் உதவி கிடைக்கவில்லை. கடைசியாக காலை 3 மணியளவில் கிராமவாசிகள் அந்த இடத்தை அடைந்தனர். ஆனால் காளிதாஸ் (75) மற்றும் சோன்பால் (50) ஆகிய இருவரும் மரணமடைந்தனர். கிராம வாசிகள் காவல் துறையினரை அழைத்தனர், ஆனால் அவர்களது வருகை தாமதமானது. பிறகு மகேந்திர சிங் என்கிற பூசாரி மாவட்ட மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமர் உஜலாவின் குறிப்பின் படி, இரண்டு விஷயங்கள் சந்தேகிக்க படுகின்றன. ஒன்று, கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் கொலையாளிகள் கோவிலுக்குள் நுழைந்திருக்கலாம். இரண்டாவதாக, கோவிலுக்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் ஏற்பட்ட நில தகராறின் விளைவாக இந்த தாக்குதல் நடைபெற்றுருக்கலாம். அந்த பகுதியில் உள்ள கோவில்களில் இரண்டு நாட்களில் மூன்றாவதாக அரங்கேறும் சம்பவம் இது என்று ஜக்ரான் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. அலிகரின் பல்வேறு பகுதிகளில் கோவில்கள் தாக்கப்பட்டு, சிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. தெளரி கிராமத்தில், துர்கா சிலைகள் கடந்த மாதம் உடைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story