Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் நடக்கும் இலக்கிய திருவிழாவை தடுத்து நிறுத்துங்கள் : இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் திராவிட கழகம் போராட்டம்

புதுச்சேரியில் நடக்கும் இலக்கிய திருவிழாவை தடுத்து நிறுத்துங்கள் : இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் திராவிட கழகம் போராட்டம்

SG SuryahBy : SG Suryah

  |  16 Aug 2018 5:33 AM GMT

ஆகஸ்டு 17 அன்று புதுச்சேரியில் துவங்கவிருக்கும் பாண்டி லிட் பெஸ்டிவல் (Pondy Lit Fest 2018) எனப்படும் இலக்கிய விழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆகஸ்ட் 17 அன்று இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தவிருப்பதாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இலக்கிய விழா வலது சாரி சிந்தனைகளை வளர்க்க வழி வகுக்கும் என்பதே அக்கட்சிகள் கூறும் காரணமாகும். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணி, புதுவை ஆளுநர் கிரண் பேடி மற்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை  (சி.பி.ஐ) சேர்ந்த ஏ.எம்.சலிம் கூறுகையில், "ஐந்து அரசியல் கட்சிகளும் பிரஞ்சு தூதரகத்திற்கும், புது தில்லியிலுள்ள தூதரகத்திற்கும் கடிதம் எழுதி, அதில், இந்த இலக்கிய விழாவிற்கான இடமாக தங்கள் நிறுவனத்தை பயன்படுத்த அனுமதித்த அலையன்ஸ் ஃபிரான்சிஸ் தலைவரின் முடிவு பற்றி புகார் தெரிவிக்க உள்ளோம்", என்று கூறினார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பாலாசுப்ரமணியன், வி.சி.கே. பொருளாளர் தமிழ் மாறன் மற்றும் திராவிட கழக தலைவர் திரு. வீரமணி ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.


இதனை தொடர்ந்து பல எழுத்தாளர்களும் இடதுசாரிகளின் இந்த செயலை விமர்சித்து வருகின்றனர். எழுத்தாளர் கவுதம் சிகர்மனே ட்விட்டரில் பதிவிடுகையில், "பேச்சு சுதந்திரத்திற்கும் மற்றும் அதன் உணர்ச்சி ஆதரவாளர்களுக்கும் எவ்வளவு அக்கறை", என்று பதிவிட்டுள்ளார்.




எழுத்தாளர் சந்தீப் கோஸ் பதிவிடுகையில், "வலது சாரி சிந்தனைகளை பேசுவது குற்றமாகும் அளவிற்கு இந்தியா எப்போது கம்யூனிச நாடாக ஆனது?," என்று கேள்வி எழுப்பியுள்ளார்.





தொடர்ந்து பலரும் இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் திராவிட கழகத்தின் இந்த செயலை விமர்சித்தும், இலக்கிய விழாவிற்கு ஆதரவாகவும் பதிவிட்டது வருகின்றனர்.


Next Story