Top
undefined
Begin typing your search above and press return to search.

தலித் மக்கள் இருந்ததால் வேறு முகாமிற்கு சென்ற கிறிஸ்துவர்கள் : கேரள வெள்ள நிவாரண முகாமில் மத வேறுபாடு

தலித் மக்கள் இருந்ததால் வேறு முகாமிற்கு சென்ற கிறிஸ்துவர்கள் : கேரள வெள்ள நிவாரண முகாமில் மத வேறுபாடு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  20 Aug 2018 7:22 AM GMT

கடந்த ஜூலை மாதம், கேரள புலையர் மஹாசபா சார்பாக, 23 தலித் குடும்பங்களை சேர்ந்த 56 தலித் மக்கள், கேரள முதல்வர் பிணராயி விஜயன் அவர்களிடமும் மாவட்ட கலக்டரிடமும் புகார் ஒன்றை அளித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. அந்த புகாரில், அஞ்சிலிமூடு எல். பி பள்ளியில் இயங்கி வந்த நிவாரண முகாமில் கிறிஸ்துவர்களால் தாங்கள் அவமானப் படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.


தின்னு விஜயன் என்ற தலித் சமுதாயத்தை சேர்ந்தவர், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவிக்கையில், "தலித் மக்களுடன் உணவையும் இடத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்பாததால் 27 கிறிஸ்துவ குடும்பங்கள் வேறு முகாமிற்கு சென்றுள்ளனர்", என்று கூறினார்.



"ஜூலை 18 ஆம் தேதி எங்கள் வீடுகளை விட்டுவிட்டு,  நிவாரண முகாமிற்கு வந்தோம். முகாமில் 23 தலித் குடும்பங்களும், 28 கிறிஸ்துவ குடும்பங்களும் இருந்தன. கிறிஸ்துவ குடும்ப உறுப்பினர்கள் தங்களின் உணவு பொருட்களின் பங்கை எங்களிடம் கேட்டனர். அவர்களின் உணவை அவர்களே சமைத்து கொள்வதாக கூறினர். இருப்பினும், நாம் அனைவரும் உணவுகளை ஒன்றாகச் சேர்த்து சமைத்து, முகாமின் இடத்தைப் பகிர்ந்து கொள்வோம் என்று கூறினோம். எனினும், அவர்கள் எங்கள் வார்த்தைகளை கேட்க தயாராக இல்லை. ஆனால் ஒரு முகாமுக்கு வழங்கப்பட்ட உணவைப் பிரித்தெடுப்பது சரியல்ல என்று அவர்களிடம் சொன்னோம். இதைத் தொடர்ந்து, அவர்கள் எங்களுடன் சண்டையிட்டனர். அவர்களில் சிலர், நாங்கள் அவர்களின் சமூகத்தை சேர்ந்த பெண்களுடன் தவறாக நடந்துகொண்டோம் என்று காவல் துறையிடம் புகார் செய்தனர்.



கிறிஸ்துவர்கள்  அளித்த புகாரை தொடர்ந்து, கிராம அதிகாரி மற்றும் எங்கள் வார்டு உறுப்பினர் சேர்ந்து கொண்டு சனிக்கிழமை அன்று அவர்களுக்கென்று மற்றொரு முகாமை ஏற்பாடு செய்தனர். பிறகு அவர்கள் எங்கள் முகாமில் இருந்து சென்றனர். இது எங்களுக்கு ஒரு பெரிய அவமானம். எல்லா தலித் மக்களுக்கும் இது மிகவும் வேதனையாக இருக்கிறது. நாங்கள் மனிதர்களாக இருக்கிறோம். எனவே, இந்த முடிவை எதிர்த்து நாங்கள் புகார் செய்துள்ளோம்", என்று மேலும் கூறினார்.



கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "அவர்கள் எங்கள் பெண் குழந்தைகளை கை பேசியில் வீடியோ எடுத்தனர். நாங்கள் அதை கேள்வி கேட்கவே அது சண்டையில் முடிந்தது. எனவே நாங்கள் வேறு முகாமிற்கு சென்றோம்", என்று கூறினார்.



கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, மக்களை காப்பாற்றவும் நிவாரணம் அளிப்பதற்கும் அனைத்து அரசுகளும், ராணுவ அதிகாரிகளும், பாதுகாப்பு அமைச்சகமும் முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கும் இத்தருணத்தில் கிறிஸ்துவர்கள் இவ்வாறு மத வெறியாட்டம் ஆடியிருப்பது நாட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

Next Story