Top
undefined
Begin typing your search above and press return to search.

அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ் : வாஜ்பாய் அறிவுறுத்தலின் பேரில் வி.பி.சிங் ஆட்சியில் வழங்கப்பட்டது - ஸ்ம்ருதி இரானி

அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ் : வாஜ்பாய் அறிவுறுத்தலின் பேரில் வி.பி.சிங் ஆட்சியில் வழங்கப்பட்டது - ஸ்ம்ருதி இரானி

SG SuryahBy : SG Suryah

  |  21 Aug 2018 5:28 AM GMT

முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவர் திரு. லால் கிருஷ்ண அத்வானி ஆகியோரின் முயற்சிகளின் காரணமாகவே, திரு. வி.பி. சிங் அரசாங்கத்தில் டாக்டர். அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தியின் நாடாளுமன்ற தொகுதியான அமேத்திக்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த ஸ்மிருதி இரானி பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும்  பகுஜன் சமாஜ் காட்சிகளை வெளிப்படையாக விமர்சிக்கும் போது, "பாபா சாஹேப்பை பின்பற்றுபவர்கள் நாங்கள் தான் என்று கூறிக்கொள்ளுபவர்கள் காங்கிரஸ் அதிகாரத்தில் இருக்கும் போது பாரத் ரத்னா அவருக்கு கொடுக்காதது ஏன் ?,"என்று அவர் கூறினார்.

2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை எதிர்க்க காங்கிரஸுடன் கை கோர்க்கும் முடிவில் இருக்கும் மாயாவதியை விமர்சிக்கும் நோக்குடன் இப்படி பேசப்பட்டதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின் போது பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்களுக்கு உயரிய விருது வழங்கப்படாதது குறித்து பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை மாயாவதி அவர்கள் விமர்சித்து வந்ததாக அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். திரு.வி.பி. சிங் அவர்களின் அரசாங்கத்தை இரண்டு நிபந்தனைகளுடன் மாயாவதி அவர்கள் ஆதரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒன்று, அம்பேத்கர் அவர்களுக்கு உயரிய விருதும் மற்றொன்று மண்டல் கமிஷன் படி O.B.C சமூக மக்களுக்கு இட ஒதிக்கீடும் அளிக்க வேண்டும் என்பது தான். பா.ஜ.க மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஜனதா தல் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


பா.ஜ.க ஆட்சியில் தான் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படம் நாடாளுமன்ற மத்திய அறையில் பொருத்தப்பட்டது என்று கூறிய ஸ்மிருதி இரானி, "குடியரசு தின அணிவகுப்பில் அம்பேத்கருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டதும் மோடியின் ஆட்சியில் தான்", என்று குறிப்பிட்டார்.

Next Story