Top
undefined
Begin typing your search above and press return to search.

உடல்நலம் சரியில்லாத 17 வயது சிறுமியை 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் !

உடல்நலம் சரியில்லாத 17 வயது சிறுமியை 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் !

SG SuryahBy : SG Suryah

  |  21 Aug 2018 4:42 AM GMT

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியை சார்ந்த 17 வயது உடல் நிலை சரியில்லாத சிறுமியை பாதிரியார் 3 மாதங்களாக கற்பழித்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் நரகத்துக்கு போவாய் என மிரட்டியும் உள்ளார்.


ஆந்திராவின் கிழக்கு கோதாவரி காக்கிநாடாவை சேர்ந்தவர் ஜோஷ்வா. இவர் அந்த பகுதியில் இருக்கும் ஹவுஸ் ஆப் சால்வே என்ற தேவாலயத்தில் பாதிரியாராக இருக்கிறார். அதே பகுதியை சார்ந்த உடல் நலம் சரியில்லாத 17 வயது சிறுமியை அழைத்து உடல் நலம் சரியாக பிரார்த்தனை செய்வதாக கூறி அவரது அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.


இப்படி 3 மாதம் சிறுமியை தொடர்ந்து பல முறை பலாத்காரம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமி கொடுமையை தாங்கமுடியாமல் தனது  பெற்றோர்களிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காக்கிநாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போஸ்கோ சட்டத்தின் படி பாதிரியாரின் மேல் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை கற்பழித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் சமயத்தில் உடல் நலம் சரியில்லாத சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
Next Story