Top
undefined
Begin typing your search above and press return to search.

பசு கடத்தும் குண்டர்களால் நாக்கை அறுத்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இந்து சாதுக்கள் : 5 பேர் கைது

பசு கடத்தும் குண்டர்களால் நாக்கை அறுத்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இந்து சாதுக்கள் : 5 பேர் கைது

SG SuryahBy : SG Suryah

  |  22 Aug 2018 6:25 PM GMT

கடந்த வாரம், உத்தர பிரதேச மாநிலம், ஆயுரியா மாவட்டத்தில், பசு வதையை எதிர்த்த இரண்டு இந்து சாதுக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இது குறித்து ஆயுரியா மாவட்ட காவல்துறை எஸ்.பி.நாகேஷ்வர சிங் கூறுகையில், "கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பசு கடத்தலில் ஈடுபட்டவர்கள். ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு, லஜ்ஜா ராம் என்ற சாது, காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, டிபியாபூர் பயநக்நாத் கோவிலுக்கு அருகில் பசுக்களை சட்ட விரோதமாக கடத்தி கொலை செய்யப்படுவது குறித்து புகார் அளித்திருந்தார். இதை அடுத்து காவல்துறையினர் அங்கு சென்று பசுக்களை மீட்டு, ஆயுதங்களுடன் இருந்த குற்றவாளிகளை பிடித்தனர். இதனை அடுத்து அவர்களின் குற்றங்களுக்கு இடையூறாக இருந்த இந்து சாதுக்களை கொடூரமாக படுகொலை செய்துள்ளனர்", என்று கூறினார்.


சல்மான், நதீம், ஷாஜாத், நஜீம் மற்றும் ஜபர் ஆகியோரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். பசு பாதுகாவலர்களின் பேச்சு சுதந்திரத்தை தடுக்கும் அடையாளமாக லஜ்ஜா ராம் என்ற இந்து சாதுவின் நாக்கை அறுத்து கொலை செய்துள்ளனர். ஹர்பஜன் என்ற மற்றொரு சாதுவை அவர் உறங்கிக்கொண்டிருந்த கட்டிளுடன் சேர்த்து கட்டி படுகொலை செய்துள்ளனர். மூன்றவது சாதுவான ராமசாரன் என்பவர் சைபை மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.


இந்த படுகொலைகளுக்கு காரணம், பசு பாதுகாவலர்களின் போராட்டத்தை நிறுத்துவது தான் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Next Story