Top
undefined
Begin typing your search above and press return to search.

பெண் தெய்வங்களை கொச்சை படுத்திய மனுஷ்யபுத்திரனுக்கு எதிராக காவல்துறையிடம் புகார் அளித்தார் ஜெமிலா

பெண் தெய்வங்களை கொச்சை படுத்திய மனுஷ்யபுத்திரனுக்கு எதிராக காவல்துறையிடம் புகார் அளித்தார் ஜெமிலா

SG SuryahBy : SG Suryah

  |  22 Aug 2018 5:58 AM GMT

தி.மு.க-வை சேர்ந்த மனுஷ்யபுத்திரன் என்ற அப்துல் ஹமீத் ஷெய்க் முஹம்மத் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பெண் தெய்வங்களை இழிவு படுத்தி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.


இந்த பதிவை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். பா.ஜ.க தேசிய செயலாளரும் இந்து கோவில்கள் மீட்பு இயக்கத்தின் தலைவருமான திரு H ராஜா அவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கையில், “தனியார் தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன் இந்துக்களின் பெண் தெய்வங்களை இழிவு படுத்தியதற்கு இந்துக்கள் எதிர்வினையாற்றாத காரணத்தால் மனுஷ்யபுத்திரன் என்கிற பெயரில் ஒளிந்து கொண்டுள்ள அப்துல் ஹமீது என்கிற முஸ்லிம் மதவெறியன்அதே செயலில் ஈடுபட்டுள்ளார். காவல்துறையில் புகார் செய்யவும்”, என்று பதிவிட்டிருந்தார்.



இந்த சர்ச்சையை தொடர்ந்து, மனுஷ்யபுத்திரன் என்ற அப்துல் ஹமீத் ஷெய்க் முஹம்மத் மீது, காவல்துறையில் புகார் அளித்துள்ளார் முன்னாள் பா.ஜ.க உறுப்பினர் ஜெமிலா அவர்கள்.


இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையத்தில், ஜெமிலா புகார் மனு அளித்து விட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், 'பெண்களை அவமதிக்கும் வகையில் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து கவிதைகளை எழுதி வருவதாகவும், இது போன்ற செயல்கள் பெண்களையும் வெகுவாக அவமதிக்கும்' என்றும் கூறினார்



பெண்களை போற்ற வேண்டும் என்றால் அதற்கு நிறைய வழிமுறைகள்  இருக்கிறது.ஆனால்  பெண்களின் மாதவிடாய்  ரத்தத்தை மையப்படுத்தி எழுதுவது பெருமையா? என்று கேள்வி எழுப்பியுள்ள  ஜெமிலா இதற்கான நியாயம் கேட்டு தான் நீதிமன்றம் செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார்.



இதை தொடர்ந்து, பா.ஜ.க மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் ட்விட்டரில் பதிவிடுகையில், "இந்து பெண் தெய்வங்களை பழிப்பதும் விமர்சிப்பதுமே உங்கள் கவிதையின் கரு என்பதால் பெண்மையை இழிவு படுத்தும் மனுஷ்யபுத்திரன் புனைப்பெயரில் ஒலிந்திருக்கும் அப்துல் ஹமீது -விஷ கருத்துக்கு துணைநிற்கும் சுபவீ. ஜபருல்லா?தமிழகத்தின் மதநல்லிணக்கத்தைக் குலைக்கும் இவர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும்", என்று பதிவிட்டுள்ளார்.


இந்து பெண்தெய்வங்களை பழிப்பதும் விமர்சிப்பதுமே உங்கள்கவிதையின் கரு என்பதால் பெண்மையை இழிவு படுத்தும் மனுஷ்யபுத்திரன் புனைப்பெயரில் ஒழிந்திருக்கும் அப்துல்ஹமீது -விஷகருத்துக்கு துணைநிற்கும் சுபவீ.ஜபருல்லா?தமிழகத்தின் மதநல்லிணக்கத்தைக்குலைக்கும்இவர்களை காவல்துறை கைது செய்யவேண்டும்.


— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP)
August 21, 2018


 


தொடர்ந்து மனுஷ்யபுத்திரனுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதால் அவரை காவல்துறை உடனடியாக கைது செய்யுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.


Next Story