Top
undefined
Begin typing your search above and press return to search.

சத்திஸ்கரின் "நயா ராய்ப்பூர்" என்ற நகரம் "அடல் நகர்" என்று பெயர் மாற்றம்!

சத்திஸ்கரின் நயா ராய்ப்பூர் என்ற நகரம் அடல் நகர் என்று பெயர் மாற்றம்!

SG SuryahBy : SG Suryah

  |  22 Aug 2018 8:37 AM GMT

இந்தியாவின் ஒப்பற்ற தலைவர் திரு வாஜ்பாய் அவர்கள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலமானார். கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கார்கில் போரில் வென்றது, இந்தியாவை அணு ஆயுத நாடாக மாற்றியது, பொருளாதார வளர்ச்சியில் உச்சத்தை தொட்டது, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சி, தங்க நாற்கர சாலை என இவர் சாதனைகள் பல உண்டு, அதுவும் ஐந்தே வருடத்தில் சாதித்துள்ளார். இவர் ஆரம்பித்த கட்சி இப்பொழுது 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ளது. மத்தியிலும் இவரின் கட்சி ஆட்சி செய்கிறது. அரசியலுக்கு  மென்மையான அதே சமயம் வலுவான பரிணாமத்தை கொடுத்தவர்.


வாஜ்பாய் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சத்தீஸ்கரில் உள்ள "நயா ராய்ப்பூர்" என்னும் ஸ்மார்ட் சிட்டியின் பெயரை "அடல் நகர்" என்று பெயர் மாற்றம் செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. நேற்று நடந்த மந்திரி சபையின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அம்மாநில முதல்வர் திரு ராமன் சிங் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். பிலாஸ்பூர் பல்கலைக்கழகம், மருத்துவ கல்லூரி, அதிவிரைவு சாலை, தொழில்நுட்ப பூங்கா ஆகியவை வாஜ்பாய் அவர்களின் பெயரை பெறவிருக்கிறது.


நவம்பர் 1, சட்டிஸ்கர் உருவாகிய தினத்தில், தன்னலமற்ற பொது சேவை செய்தவர்களுக்கு "அடல் சுஷாஷன் விருது" வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இதேபோல் மத்திய பிரதேச அரசும் பல அறிவிப்புகளை கொடுத்துள்ளது. குவாலியர் மற்றும் போபாலில் நினைவு மண்டபம் அமைப்பது, பள்ளி பாடத்தில் அவரின் வாழ்க்கை வரலாறு இடம் பெறுவது போன்றவற்றை அறிவித்துள்ளது. போபாலில் இருக்கும் Global skill

Park வாஜ்பாய் அவர்களின் பெயரை பெறவிருக்கிறது.
Next Story