Top
undefined
Begin typing your search above and press return to search.

16 வயது துப்பாக்கிச் சுடும் வீரருக்கு பிரதமர் மோடி பாராட்டு

16 வயது துப்பாக்கிச் சுடும் வீரருக்கு பிரதமர் மோடி பாராட்டு

SG SuryahBy : SG Suryah

  |  22 Aug 2018 5:25 AM GMT




இந்தோனேஷியாவின் ஜகார்த்தா-பாலம்பங்கில் நடைபெறும் 18 ஆவது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் 2018-ல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சவ்ரப் சவுத்திரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்திருந்த ட்விட்டர் பதிவில்,
நமது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில், 16 வயதான சவ்ரப் சவுத்திரி ஆற்றலும், திறமையும் வாய்க்கப் பெற்றுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018-ல் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கத்தை நாட்டுக்கு கொண்டு வந்த இந்த இளைஞருக்கு வாழ்த்துக்கள்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

16-year old Saurabh Chaudhary illustrates the potential and prowess our youth is blessed with. This exceptional youngster brings home a Gold in the Men’s 10m Air Pistol event at the @asiangames2018. Congratulations to him! #AsianGames2018 pic.twitter.com/FHmF6TM8tK


— Narendra Modi (@narendramodi) August 21, 2018



Next Story