Top
undefined
Begin typing your search above and press return to search.

இது தான் பெரியார் வழிவந்தவர்களின் பகுத்தறிவுக்  கொள்கையோ? வாழ்க பஜனை முன்னேற்றக் கழகம்! : தி.மு.க-வை சாடிய மரு. ராமதாஸ், ட்ரெண்டாகும் #திமுகபஜனைகள்

இது தான் பெரியார் வழிவந்தவர்களின் பகுத்தறிவுக்  கொள்கையோ? வாழ்க பஜனை முன்னேற்றக் கழகம்! : தி.மு.க-வை சாடிய மரு. ராமதாஸ், ட்ரெண்டாகும் #திமுகபஜனைகள்

SG SuryahBy : SG Suryah

  |  22 Aug 2018 1:15 PM GMT




மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் திரு. கருணாநிதியின் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தி.மு.க-வினர் பஜனைப் பாடல்களைப் பாடியதை பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்திருக்கிறார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"சென்னையில் கலைஞர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பஜனை பாடல்களைப் பாடிய திமுகவினர்: செய்தி - ஓ.... இது தான் பெரியார் வழிவந்தவர்களின் பகுத்தறிவுக்  கொள்கையோ? வாழ்க பஜனை முன்னேற்றக் கழகம்!", என்று பதிவிட்டுள்ளார்.




மேலும் ஒரு பதிவில், "கலைஞர் நினைவிடத்தில் திமுகவின் ஒரு பிரிவினர் பஜனை பாடல்களை இசைத்ததன் நோக்கம்  என்ன தெரியுமா? பஜனையில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக்கருவியின் பெயர் என்ன?  இரு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான்!", என்று பதிவிட்டுள்ளார்.





தொடர்ந்து பலரும் தி.மு.க-வின் கலைஞர் பாஜனையை கிண்டலடித்து வருகின்றனர். இதை அடுத்து #திமுகபஜனைகள் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.






Next Story