Top
undefined
Begin typing your search above and press return to search.

கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் அஸ்தி கலசத்திற்கு அரசியல் பிரமுகர்கள், மாணவர்கள் அஞ்சலி

கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் அஸ்தி கலசத்திற்கு அரசியல் பிரமுகர்கள், மாணவர்கள் அஞ்சலி

SG SuryahBy : SG Suryah

  |  23 Aug 2018 5:09 PM GMT

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக வாஜ்பாயின் அஸ்தியை பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தின் பா.ஜ.க தலைவர்களிடம் ஒப்படைத்தனர். தமிழகத்தின் சார்பில் தமிழக பா.ஜ.க தலைவர் திருமதி தமிழிசை சவுந்தரராஜன் வாஜ்பாயின் அஸ்தியை பெற்றுக் கொண்டார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்தமிழகத்தில் 6 இடங்களில் கலக்க அஸ்தி கொடுக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய், அனைத்து மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர். வாஜ்பாய் கட்சிகளை கடந்து மதங்களை கடந்து, அனைவராலும் மரியாதை செலுத்தப்பட்ட தலைவர். அஸ்திக்கு அஞ்சலி செலுத்தி அவரை நினைவு கொள்ள உள்ளனர். அஸ்தியை கரைப்பது ஆன்மிக கடமை. இவ்வாறு அவர் கூறினார்.


ஏராளமான மக்கள், பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்த ஆர்வமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் அஸ்தியை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பா.ஜ.க மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்படும். 26 ம் தேதி பெளர்ணமி அன்று அஸ்தி கரைக்கப்படும்.


இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள், மாணவர்கள் ஆகியோர் கமலாலயம் சென்று, மறைந்த பிரதமர் திரு வாஜ்பாய் அவர்களின் அஸ்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.


தமிழக பா.ஜ.க தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள், மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள், தமிழக பா.ஜ.க பொது செயலாளர் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னாள் பாரத பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் அஸ்தி கலசத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



[caption id="attachment_2631" align="alignnone" width="300"]
Asthi Kalashas brought to chennai by BJP leaders[/caption]

தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னாள் பாரத பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் அஸ்தி கலசத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



[caption id="attachment_2632" align="alignnone" width="300"]
Tamilnadu CM and Deputy CM paying floral tributes to Asthi Kalashas[/caption]

தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் அவர்கள் பா.ஜ.க தலைமை அலுவலகம் கமலாயத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் அஸ்தி கலசத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.



[caption id="attachment_2633" align="alignnone" width="300"]
Tamilnadu Governor Shri. Banwarilal purohith paying floral tributes to Asthi Kalashas[/caption]

இந்து முன்னணி தலைவர் திரு. ராமகோபாலன் ஜி அவர்கள் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் அஸ்தி கலசத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.



[caption id="attachment_2634" align="alignnone" width="300"] Hindu Munnani leader Ramagopalan ji paying floral tributes to Asthi Kalashas[/caption]

தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் பா.ஜ.க தலைமை அலுவலகம் கமலாயத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் அஸ்தி கலசத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். 



[caption id="attachment_2635" align="alignnone" width="300"] DMK MP Kanimozhi paying floral tributes to Asthi Kalashas[/caption]

தி.மு.க செயல் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் அஸ்தி கலசதிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



[caption id="attachment_2636" align="alignnone" width="300"] DMK working president MK Stalin paying floral tributes to Asthi Kalashas[/caption]

தி.மு.க முன்னாள் அமைச்சர் திரு. டி. ஆர் பாலு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் வாஜ்பாய் அவர்களின் அஸ்தி கலசத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



[caption id="attachment_2637" align="alignnone" width="300"] DMK Ex Minister Dayanidhi Maran paying floral tributes to Asthi Kalashas[/caption]

பா.ம.க இளைஞர் அணி தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் வாஜ்பாய் அவர்களின் அஸ்தி கலசத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



[caption id="attachment_2638" align="alignnone" width="300"] Ex Minister Anbumani Ramadoss paying floral tributes to Asthi Kalashas[/caption]

ஹிந்து வித்யாலயா பள்ளி மாணவர்கள் வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


 



[caption id="attachment_2639" align="alignnone" width="300"] School students paying tributes to Asthi Kalashas[/caption]

இதே போல் நாடு முழுவதும் மாநில கட்சி தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அவர்களின் அஸ்தி கலசத்திற்கு பல்வேறு தரப்பு மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Next Story