Top
undefined
Begin typing your search above and press return to search.

உலக தலைவர்களை கவர்ந்த அரசியல் சகாப்தம்: வாஜ்பாய் மறைவுக்கு ஐ.நா., பொதுச்செயலாளர் இரங்கல்

உலக தலைவர்களை கவர்ந்த அரசியல் சகாப்தம்: வாஜ்பாய் மறைவுக்கு ஐ.நா., பொதுச்செயலாளர் இரங்கல்

SG SuryahBy : SG Suryah

  |  23 Aug 2018 3:19 PM GMT

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்டரஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாக நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஓய்வில் இருந்துவந்தார். இந்தநிலையில், அவருக்குச் சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாகக் கடந்த ஜூன் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 16 அன்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாய் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு இந்தியா மட்டுமல்லாது, பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்டரஸ்  இரங்கல் தெரிவித்துள்ளார். ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதி சையத் அக்பருதீன் தனது டிவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா.வுக்கான இந்திய அலுவலகத்துக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்டரஸ் நேரில் வந்ததாகவும், அங்கு வாஜ்பாய் மறைவுக்கு அவர் தனது இரங்கலை பதிவு செய்ததாகவும் சையத் அக்பருதீன் கூறியுள்ளார்.
Next Story