Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரளாவிற்கு தமிழகமும் தமிழர்களும் அனைத்து உதவிகளையும் செய்யும் தருணத்தில் தமிழகத்தின் மீது வெறுப்பை விதைக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசு

கேரளாவிற்கு தமிழகமும் தமிழர்களும் அனைத்து உதவிகளையும் செய்யும் தருணத்தில் தமிழகத்தின் மீது வெறுப்பை விதைக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசு

SG SuryahBy : SG Suryah

  |  23 Aug 2018 6:47 PM GMT

கேரளாவில் வரலாறு காணாத  வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 39 அணைகளில் இருந்து ஜூலை மாதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்புகளிலிருந்து கேரள மாநிலம் தப்பியிருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அவைகளில் பெரும்பாலான அணைகளில் 85% முதல் 90% தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது வரை 341 பேர் பலியாகியுள்ள நிலையில், 9 இலட்சத்துக்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
கேரள மாநில மின்சார வாரியத்தின் தரவரிசைப்படி, ஜூலை மாதம் மத்தியில் இருந்து அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றன.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த ஆண்டு மழை மிகவும் கடுமையாக இருந்தது. எனினும் இந்த ஆண்டு மிகவும் கடுமையான மழைப்பொழிவு மிகுந்ததாக இருக்கும் என IMD கணித்திருந்தது. ஜூலை மாதத்தில் மழை அதிகரித்து கொண்டிருந்த போது, அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்,” என தெரிவித்தார் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகஸ்டு மாதத்தில், கேரள மாநிலம் 164% மழையை பெற்றுள்ளது.
மழைக்காலத்தின் தொடக்கத்தில் இருந்து மாநிலமே அதிக மழைப்பொழிவைப் பெற்றிருந்தது. ஜூன் மாதத்தில் இது 15% அதிக மழை பெற்றது, ஜூலை மாதத்தில் 18% அதிகமாக இருந்தது. ஆகஸ்ட் 8 ம் தேதி மிக கடுமையாக மழை பெய்தது.
நீர் தேக்கங்களிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டிருந்தால் தற்போது நடந்திருக்கும் வெள்ள பாதிப்புகளிலிருந்து 20% முதல் 40% குறைக்கப்பட்டிருக்கும் என்று அந்த குறிப்பு தெரிவிக்கிறது.


இதுகுறித்து கேரள மாநில எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா மாநில அரசை குற்றம் சாட்டி உள்ளதாக தி இந்து செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த நிலையில் கேரள அரசு தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வெள்ள பாதிப்பின் போது,  தமிழக அரசு நீர் மட்டத்தை குறைக்க மறுத்துவிட்டதாக  கேரள அரசு தெரிவித்துள்ளது.
https://twitter.com/ANI/status/1032644890155347973/photo/1
கேரள வெள்ள பாதிப்புகளுக்கு தமிழகமும் தமிழர்களும் அனைத்து உதவிகளையும் செய்து வரும் தருணத்தில், பிணராயி தலைமையில் உள்ள கேரள கம்யூனிஸ்ட் அரசு இவ்வாறு நடந்து கொண்டிருப்பது தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story