Top
undefined
Begin typing your search above and press return to search.

அவசர அவசரமாக தலைவர் பதவியை ஏற்கப் போகிறார் ஸ்டாலின் : மெரினாவில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்தவிருக்கும் அழகிரி குற்றச்சாட்டு

அவசர அவசரமாக தலைவர் பதவியை ஏற்கப் போகிறார் ஸ்டாலின் : மெரினாவில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்தவிருக்கும் அழகிரி குற்றச்சாட்டு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  25 Aug 2018 9:33 AM GMT

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக செப்டம்பர் 5-ம் தேதி சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்தவிருப்பதாக அழகிரி அறிவித்திருக்கிறார். இந்த இரங்கல் ஊர்வலத்தில் தனது பலத்தை அழகிரி    வெளிப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் 5-ம் தேதி ஊர்வலத்திற்கு மாநிலம் முழுவதும் இருந்து தொண்டர்களை திரட்டுகிறார் மு.க.அழகிரி. இது தொடர்பாக மதுரை சத்ய சாய் நகரில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த இரு தினங்களாக ஆதரவாளர்களை அழைத்து ஆலோசித்து வருகிறார்.
மு.க.அழகிரி தனது ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‘நான் திமுக.வில் இல்லை. திமுக செயற்குழு பற்றி என்னிடம் ஏன் கேட்குறீங்க? தலைவர் இருக்கும் போதே தலைமைப் பதவிக்கு நான் ஆசைப்பட்டதில்லை.
அண்ணா, கலைஞர் ஆகியோர் வளர்த்த கட்சியில் சேருவதற்காக நான் கதவை தட்டுவதில் தவறில்லை.’ என்ற அழகிரியிடம், ‘2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் உங்களை கட்சியில் சேர்க்காவிட்டால் திமுக.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அழகிரி, ‘ஸ்டாலின் செயல் தலைவரான பிறகு எத்தனை தேர்தல்களில் திமுக ஜெயித்திருக்கிறது? 2014-க்கு பிறகு எந்தத் தேர்தலிலும் திமுக ஜெயிக்கவில்லை.’ என்றார்.
செப்டம்பர் 5-ஆம் தேதி பேரணி எனது பலத்தை நாட்டு மக்களுக்கு கூறுவதாக இருக்கும். சென்னையில் ஒரு திருமணத்திற்கு தேதி கொடுத்துவிட்டு ரத்து செய்த ஸ்டாலின், இப்போ அவசர அவசரமாக தலைவர் பதவியை ஏற்கப் போகிறார்.’ என்றார் அழகிரி.
Next Story