Top
undefined
Begin typing your search above and press return to search.

காதல் திருமணம் செய்த இளைஞன் படுகொலை : இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதன் வினை

காதல் திருமணம் செய்த இளைஞன் படுகொலை : இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதன் வினை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  25 Aug 2018 4:43 AM GMT




அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் நேரு காலனியை சேர்ந்த சஞ்சய் குமார்(22), அவரது ஊரில் வசித்து வந்த ருக்சார் என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறி, ராஜஸ்தான் சென்று பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். ருக்சார் தனது பெயரை ருக்மணி என மாற்றி கொண்டு, இந்து மத பழக்க வழக்கங்களை கடைபிடித்து வந்தார்.
சில மாதங்களுக்கு பிறகு அவர், கர்ப்பமானதை தொடர்ந்து, சொந்த ஊருக்கு சென்றனர். இதனையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் சஞ்சயை இஸ்லாமிய மதத்திற்கு மாற வலியுறுத்தினர். ஆனால், அவரது குடும்பத்தினர் இதற்கு அனுமதிக்கவில்லை. இதனையடுத்து சஞ்சய் மனைவியை அழைத்து கொண்டு வேறு பகுதியில் குடியேறினார். இந்த பிரச்னைகள் காரணமாக இரண்டு குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. சஞ்சயிடமிருந்து வலுக்கட்டாயமாக ருக்சாரை, குடும்பத்தினர் விவகாரத்து செய்து வைத்தனர். காதல் மனைவியை மறக்க முடியாமல், சஞ்சய் மீண்டும் ராஜஸ்தான் சென்று விட்டார்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி ருக்சரின் சகோதரர் சலீம், சஞ்சயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நேரில் சந்தித்து பேச வேண்டும், பிரச்னையை தீர்க்க வேண்டும் எனக்கூறி, அழைத்துள்ளார். இதனை நம்பி, மறுநாள் சொந்த ஊர் வந்த சஞ்சயை, சலீம் அழைத்து சென்று படுகொலை செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் சஞ்சய் வீடு திரும்பாததால், அவரின் தாயார் காவல் துறையிடம் புகார் அளித்தார். காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிறகு, கடந்த 21ம் தேதி சஞ்சயின் உடலை கைப்பற்றினர். இது தொடர்பாக ருக்சரின் தந்தை, சகோதரரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களை காதலித்து திருமணம் செய்து கொள்பவர்களை படுகொலை செய்யும் பழக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.





Next Story