Top
undefined
Begin typing your search above and press return to search.

அல் ஜசீரா தொலைக்காட்சி அலைவரிசையின் இந்தியவிற்கான அனுமதியை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி !

அல் ஜசீரா தொலைக்காட்சி அலைவரிசையின் இந்தியவிற்கான அனுமதியை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி !

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  25 Aug 2018 4:50 AM GMT

அல் ஜசீரா என்னும் பிரபல ஆங்கில தொலைக்காட்சி அலைவரிசையின் இந்திய பாதுகாப்பு அனுமதியை (Security Clearance) மத்திய உள்துறை அமைச்சகம் திரும்ப பெற்றது. 2010 ஆம் ஆண்டு வழங்கிய உரிமத்தை 2018 ஆம் ஆண்டு திரும்ப பெற்றது. இதனால் இந்தியாவில் இந்த தொலைக்காட்சி அலைவரிசையை ஒளிபரப்ப முடியாது.


கத்தாரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் அல் ஜசீரா, பல நாடுகளில் ஒளிபரப்பு செய்துவருகிறது. அனுமதியை ரத்து செய்ததை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இன்னும் இறுதி முடிவை அரசு தெரிவிக்கவில்லை.


அனுமதி ரத்துக்கான தெளிவான காரணம் தெரியவில்லை. சமீபத்தில் அல் ஜசீரா ஜம்மு காஷ்மீர் குறித்த ஆவண படத்தை வெளியிட்டது. ஆவண படம் கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக இருப்பதாக மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது. உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்ட போது, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பதிலுக்காக காத்திருப்பதாக தெரிவித்தது.


2015 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் தவறான வரைபடத்தை காட்டியதால் 5 தினங்கள் ஒளிபரப்பை நிறுத்தவேண்டியதாகியது என்பது குறிப்பிடதக்கது.


ஊடகங்கள் பொய் செய்திகளை வெளியிடுவதும், செய்திகளை திருத்தி கூறுவதும், மக்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக செய்திகளை மாற்றி கூறுவதும் தொடர் கதையாக உள்ளது. சமீபத்தில் UAE 700 கோடி நிவாரண உதவி என்ற செய்தி மிக பெரிய எடுத்துக்காட்டு. மத்திய அரசு இதுபோல செயல்படும் செய்தி நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.

Next Story