Top
undefined
Begin typing your search above and press return to search.

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Aug 2018 5:35 PM GMT

நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்ற விவகாரத்தில் அரசியல் கட்சிகள் சில ஆதரவும், சில எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. ஆனால், இது சாத்தியமில்லை என தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. இந்நிலையில் நேற்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக்கட்சிகள் மற்றும் 51 மாநிலக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது. தற்போது திட்டமிட்டபடி நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்துப் பேசுவதற்காக டெல்லியில் தேர்தல் ஆணையம் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.

தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டம்:
இந்தக் கூட்டத்தில் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்த முன்னேற்பாடுகள் பற்றி தேர்தல் ஆணையம் விவாதித்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும்  51 மாநில கட்சிகள் உள்ளன.  திமுக சார்பாக டிகேஎஸ் இளங்கோவன் , அதிமுக சார்பாக  தம்பிதுரையும் பங்கேற்றனர்.
தேர்தல் ஆணையர்கள் சுனில் அரோரா, அசோக் லாவாசா ஆகியோரும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், அரசியல் கட்சிகளின் செலவுக்கு உச்சவரம்பு விதித்தல், வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்துவதற்கான கோரிக்கை ஆகியவை பற்றிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Next Story