Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரளத்தில் நிவாரண பொருட்களை அபகரித்து ஸ்டிக்கர் ஒட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு: சந்தி சிரிக்கும் கேரள அரசியல் களம்

கேரளத்தில் நிவாரண பொருட்களை அபகரித்து ஸ்டிக்கர் ஒட்டுவதாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு: சந்தி சிரிக்கும் கேரள அரசியல் களம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Aug 2018 9:51 AM GMT

கேரளாவில் ஆளும் இடது முன்னனியின் முக்கிய அங்கமாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கேரள வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக குடுமிபிடி சண்டை உருவாகியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரள வெள்ள நிவாரண பொருட்களை களவாடி மூணாரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பதுக்கி வைத்துள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
இடுக்கி மாவட்ட கலெக்டருக்கு நிவாரணத்திற்காக வந்த பொருட்கள் அனைத்தும் இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது. அந்த பொருட்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முத்திரை பதித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடிகளுடன் வாகனங்களில் எடுத்து சென்று விநியோகிக்கப்படுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இந்த நடவடிக்கைகள் அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது.
மூணார் மாவட்ட கலெக்டருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து தன்னார்வலர்களாலும், தொண்டு நிறுவனங்களாலும் அனுப்பப்பட்டு வரும் நிவாரண பொருட்கள் நேரடியாக மூணார் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு கடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவுக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் பதுக்கி வைக்கப்பட்டு, துயரடையும் மக்களை சென்றடையாமலேயே முடங்கிக் கிடப்பதாக குற்றம்சாட்டுகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
பலதரப்பட்ட மக்கள் தங்கள் அதிருப்தியையும் புகாரையும் கலெக்டர் அலுவலகத்தில் சொல்லி கண்ணீர் சிந்த, இடுக்கி மாவட்ட துணை-கலெக்டர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அழைத்து கடுமையாக கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை(25.08.2018) அன்று தமிழ் நாட்டில் இருந்து சென்ற நிவாரண பொருட்கள் அடங்கிய 3 லாரிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழிமறித்து தங்கள் கட்சி அலுவலகங்களுக்கு கடத்த முன்ற போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் அதை தடுத்து நிவாரண பொருட்கள் மக்களை சென்றடைய வழிவகை செய்துள்ளனர்.
இவ்வாறு மழையின் கோரத்தில் சிக்கி தவிக்கும் கேரளாவில் மக்களுக்கு உதவாமல் கீழ்த்தர அரசியலில் ஈடுபட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை மக்கள் வசைபாடிவருகின்றனர். மேலும் இந்த தகவல்களை மக்களுக்கு தெரியபடுத்தாமல் ஊடகங்கள் திட்டமிட்டு மறைப்பதாகவும் கருதுகின்றனர்.
Next Story