Top
undefined
Begin typing your search above and press return to search.

கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற வற்புறுத்தி பெற்ற தந்தையை அறையில் வைத்து அடைத்து, அடித்து உதைத்து கொடுமைபடுத்திய மதம் மாறிய மகன்

கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற வற்புறுத்தி பெற்ற தந்தையை அறையில் வைத்து அடைத்து, அடித்து உதைத்து கொடுமைபடுத்திய மதம் மாறிய மகன்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Aug 2018 6:12 PM GMT





ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு புது வீதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு அவரது பாட்டனார் வழியில் 2 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவருக்கு லலிதா என்ற மனைவியும் ஸ்ரீநாத் என்ற மகனும் உள்ளனர். இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளனர்.
நாராயணசாமிக்கு உடன் பிறந்த மூத்த சகோதரி ஒருவர் உள்ள நிலையில், சொத்தில் அவருக்கான பங்கு சென்று விடாமல் தங்களது பெயருக்கு எழுதிவைக்க வேண்டும் எனவும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும் படியும் லலிதாவும் ஸ்ரீநாத்தும் நாராயணசாமியை வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. மதம் மாற ஒப்புக் கொள்ளாததால், அவரை தனி அறையில் பல நாட்களாக அடைத்து வைத்து சரியாக உணவு வழங்காமல் அடித்து, உதைத்து லலிதாவும் ஸ்ரீநாத்தும் கொடுமைப்படுத்தி வந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் சொத்து ஆவணத்தில் கையெழுத்து போடுமாறு வற்புறுத்தி அவர் மறுத்ததால், இரும்புக் கம்பியை பழுக்கக் காய்ச்சி உடலெங்கும் அவர்கள் சூடு வைத்ததாக பாலிமர் செய்தி குறிப்பு கூறுகிறது.
அப்போது அவர் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து நாராயணசாமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் லலிதாவையும் ஸ்ரீநாத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சொத்துகளை எழுதிவைக்க வற்புறுத்தியும் மதம் மாற வற்புறுத்தியும் பெற்ற தகப்பன் என்றும் பாராமல் பிள்ளையும் கணவர் என்று பாராமல் மனைவியுமே அடித்துக் கொடுமைப் படுத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மதம் மாறிய கிறிஸ்துவர்களை இந்துக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு வன்முறை ஏற்படுத்தும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.




Next Story