Top
undefined
Begin typing your search above and press return to search.

இளம்பெண்ணை ரத்தம் சொட்ட சொட்ட கழுத்தை அறுத்து கொலை செய்த முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சிவகங்கை மாவட்ட துணை செயலாளர்

இளம்பெண்ணை ரத்தம் சொட்ட சொட்ட கழுத்தை அறுத்து கொலை செய்த முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சிவகங்கை மாவட்ட துணை செயலாளர்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Aug 2018 6:07 PM GMT





புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒக்கூரை சேர்ந்தவர் ராஜா முகமது என்பவரின் மனைவி யாசினி ஆவார் . வேலைக்காக ராஜா முகமது வெளிநாடு சென்று 2 மாதங்கள் ஆகின்றன. இதனை அடுத்து யாசினி ஒக்கூரில் உறவினர்கள் ஆதரவுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், யாசினிக்கும் அவரது உறவினரான சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை சேர்ந்த சிராஜூதீனுக்கும் இடையே  முன் விரோதம்  காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, நேற்று (27 ஆகஸ்ட்) மதியம் யாசினி வீட்டிற்கு வந்த சிராஜூதீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, ஆத்திரத்தில் யாசினியை ரத்தம் சொட்ட சொட்ட  கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஆசியானெட் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.  இதையடுத்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற சிராஜூதீனை பொது மக்கள்,  மடக்கி பிடித்து  பலமாக தாக்கினர். இதில் சிராஜூதீன் மயங்கி விழுந்தார்.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த கரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யாசினி உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சிராஜூதீனை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினர் விசாரித்ததில், கொலை செய்த சிராஜூதீன் என்பவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சிவகங்கை மாவட்ட துணை செயலாளராக உள்ளார் என்று அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. யாசினி கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story