Top
undefined
Begin typing your search above and press return to search.

15 டி.எம்.சி தாமிரபரணி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது , சேமிக்க திட்டம் வகுக்காத காரணம் என்ன ?

15 டி.எம்.சி தாமிரபரணி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது , சேமிக்க திட்டம் வகுக்காத காரணம் என்ன ?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Aug 2018 4:55 AM GMT

கேரளாவில் பெய்த கன மழை , திருநெல்வேலி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் எதிரொலித்தது. வழக்கமாக இம்மாதம் 29 செ.மீ மழை பெய்யும், ஆனால் 51 செ.மீ மழை பெய்தது. 74% அதிக மழை பெய்துள்ளது. அதிக மழை பெய்தும் , உபரி நீர் சேமிக்கப்படாமல் 15 டி.எம்.சி நீர் கடலில் வீணாக கலந்ததுள்ளது.


திருநெல்வேலி அருகே இருக்கும் முக்கிய அணைகளில் 75% தண்ணீர் இருப்பு உள்ளது. தாமிரபரணி, சிற்றாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ள நீரை சேமிக்க முடியாமல் வீணாக கடலில் கலந்தது.


திருநெல்வேலி சுற்று வட்டாரத்தில் பல குளங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. வெள்ள உபரி நீரை குளங்களுக்கு திருப்பிவிட அதிகாரிகள் தயங்குகின்றனர். காரணம், பல வருடங்களாக குளங்கள் பராமரிக்கபடவில்லை.  குளங்களை நிரப்பினால் உடைந்துவிடுமோ என்ற அச்சம். ஒவ்வொரு பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் , குளங்கள் நீர்நிலைகள் தூர்வார நிதி ஒதுக்கியும், ஒரு குளம் கூட தூர்வாரவோ பராமரிக்கப்படவோ இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


திருநெல்வேலி ஆறுகளில் மணல் அள்ளுவது படுஜோராக நடைபெறும். தற்போது வெள்ளம் வந்ததால் மணல் இருப்பும் அதிகரித்துள்ளது. மணல் கொள்ளையும் அதிகரிக்கும் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


தண்ணீர் வேண்டும், தண்ணீர் வேண்டும் என்று அண்டை மாநிலங்களிடமிருந்து பெற்று வரும் நிலையில். உபரி மழை நீரை சேமிக்க எந்த திட்டமும் வகுக்கபடாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

Next Story