Top
undefined
Begin typing your search above and press return to search.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வை பை மரம்

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வை பை மரம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Aug 2018 5:41 PM GMT




கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வை பை மரம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சியில் 25 இடங்களில் வைபை மரம் அமைக்கப்பட உள்ளதாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். செயற்கை வைபை மரம் மூலமாக மாநகராட்சிக்கு ₹18.25 லட்சம் வருவாய் கிடைப்பதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக வ.உ.சி மைதானத்தில் தங்கமரம் என்ற பெயரில் இந்த செயற்கை மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தை சுற்றி சுமார் 400 மீட்டர் சுற்றளவிற்கு இலவச வை-பை வசதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 1500 வாட்ஸ் மின் சக்தி சோலார் பேனல் மூலம் எல்.இ.டி விளம்பர பலகை இயக்கப்படும். இதில் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், மற்றும் பொதுமக்கள் தொடர்பான அறிவிப்புகளும் ஒளிபரப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story