Top
undefined
Begin typing your search above and press return to search.

உலக அளவிலான விவசாயிகள் மாநாட்டை உத்தர பிரதேசத்தில் நடத்துகிறது யோகி அரசு

உலக அளவிலான விவசாயிகள் மாநாட்டை உத்தர பிரதேசத்தில் நடத்துகிறது யோகி அரசு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Aug 2018 5:43 AM GMT





உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு மூன்று நாள் உலக அளவிலான விவசாயிகள் மாநாட்டை அக்டோபர் மாதம் 26 ஆம் துவங்க உள்ளது.


இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட UP முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2018 போன்று ஒரு பெரிய நிகழ்வாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு 'கிருஷி கும்பம்' (விவசாயத்தின் கும்பம்) என்று அழைக்கப்படும். கிராமப்புற பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.


நவீன விவசாய தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்கும், சிறந்த விவசாய வருமானத்தை ஊக்குவிப்பதற்கும் 1,00,000 விவசாயிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. யோகி ஆதித்யநாத் அரசாங்கம் "விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உறுதிபூண்டிருக்கிறது" என்று விவசாய அமைச்சர் சூர்யா பிரதாப் சாஹி கூறினார்.


உத்தரப்பிரதேச மாநிலம், 2.33 கோடி விவசாய குடும்பங்களை கொண்ட சிறந்த விவசாய மாநிலங்களில் ஒன்றாகும். கூட்டுத் தயாரிப்பு மற்றும் பால் உற்பத்திகளில் முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் இதுவாகும். விவசாயிகள் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில், வலுவான கிராமிய பொருளாதாரத்தை கட்டமைப்பது கிருஷி கும்பத்தின் நோக்கமாக இருக்கும்.


கடந்த ஆண்டு, யோகி ஆதித்யநாத் அரசு பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தது. தானியங்கள் பயிரிடுதல் மற்றும் நீர் பயன்பாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது யோகி அரசு.


சமீபத்தில் தேசிய தலைநகரான டில்லியில் நடந்த ஒரு நிகழ்வில் இந்த மாநாட்டை அறிமுகப்படுத்தியது யோகி அரசு. விவசாய நிபுணர்கள், விஞ்ஞானிகள், பொது மற்றும் தனியார் துறை மற்றும் தொழில் முனைவோர் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.





Next Story