Top
undefined
Begin typing your search above and press return to search.

தி.மு.க தலைவரான ஸ்டாலினும் மிரட்டல் விடும் அழகிரியும்

தி.மு.க தலைவரான ஸ்டாலினும் மிரட்டல் விடும் அழகிரியும்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  28 Aug 2018 11:56 AM GMT





திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, அக்கட்சியின் தலைவர், பொருளாளர் பதவிக் கான தேர்தல் ஆகஸ்ட் 28-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். இதையொட்டி, தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 26-ம் தேதி நடந்தது. தலைவர் பதவிக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் பொருளாளர் பதவிக்கு முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்று வருகிறது.


திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முறைப்படி அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் இதனை அறிவித்தார்.


ஸ்டாலின் திமுக தலைவராவது உறுதியான நிலையில், “என்னைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் கடும் பின் விளைவுகளைச் சந்திக்கவேண்டும்” என்று நேற்று எச்சரிக்கை விடுத்தார் அழகிரி. செப்டம்பர் ஐந்து அன்று, கருணாநிதியின் நினைவிடத்தில் தமது ஆதரவாளர்களுடன் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
“செப்டம்பர் 5 வரை பொறுத்திருந்து பாருங்கள். தலைவர் அவர்களின் நினைவிடத்தில் அமைதி ஊர்வலம் சென்று மரியாதை செலுத்த உள்ளோம். அதன்பிறகு பாருங்கள்…” என்று நேற்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியுள்ளார்.




Next Story