Top
undefined
Begin typing your search above and press return to search.

அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை அமித் ஷா மீது வைத்ததால் ராகுல் காந்தியின் மீது மான நஷ்ட வழக்கு

அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை அமித் ஷா மீது வைத்ததால் ராகுல் காந்தியின் மீது மான நஷ்ட வழக்கு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  29 Aug 2018 7:27 AM GMT

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் திரு அமித் ஷா அவர்களை இயக்குனராக கொண்ட அகமதாபாத் கூட்டுறவு வாங்கி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது. பண மதிப்பிழப்பின் போது 746 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை முதல் ஐந்து தினத்தில் அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் மாற்றியதாக குற்றம் சாட்டினர்.

மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் பதிவு செய்த RTI கோரிக்கைக்கு பதில் அளித்தது தேசிய விவசாய வங்கி. பதிலின் அடிப்படையில் ₹746 கோடி கருப்பு பணம் வெள்ளை பணமாக மாற்றப்பட்டது என்று குற்றம் சாட்டினர். இதற்கு உடந்தையாக இருந்தது வங்கியின் தலைவர் , அவர் அமித் ஷா அவர்களின் நெருங்கிய நண்பர் என்றும் குற்றம் சாட்டினர். 1.6 லட்ச மக்களின் சேமிப்பு பணம் தான் ₹746 கோடி என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.


எந்த ஒரு சரியான ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை பா.ஜ.க மீது காங்கிரஸ் வைப்பதாக தெரிகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Next Story