Top
undefined
Begin typing your search above and press return to search.

சிங்கப்பூரை பின்னுக்கு தள்ளிய இந்தியாவின் அன்னிய முதலீடு

சிங்கப்பூரை பின்னுக்கு தள்ளிய இந்தியாவின் அன்னிய முதலீடு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  28 Aug 2018 7:20 PM GMT

அன்னிய முத­லீ­டு­களை வர­வேற்­ப­தில், இந்­தியா தொடர்ந்து முன்னிலை வகிக்­கிறது. முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தில் நாம் உலக அளவில் முதல், 10 இடங்­க­ளுக்­குள் இருக்­கி­றோம். காப்­பீடு, பாது­காப்பு, சில்­லரை வணி­கம் உட்­பட, 15 துறை­களில் நாம் அன்னிய முத­லீ­டு­க­ளுக்கு அனு­மதி அளித்­துள்­ளோம்.

ஒரு சில துறை­களில், 49 சத­வீ­தம் முதல், வேறு சில துறை­களில், 100 சதவீ­தம் வரை அன்னிய முத­லீடு அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளன. இத­னா
ல், உள்­நாட்டு தொழில் முயற்­சி­கள் பெரு­கும், வளர்ச்சி மேம்­படும், வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என்­பதே நம் எதிர்­பார்ப்பு.

இதை­ய­டுத்து, ஒவ்­வொரு ஆண்­டும் எவ்­வ­ளவு கூடு­த­லாக அன்னிய முத­லீ­டு­களை ஈர்க்­கி­றோம் என்­பது கவ­ன­மாக பார்க்­கப்­ப­டு­கிறது. 2018-19 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு 23 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான வெளிநாட்டு முதலீடுகள் $10.4 பில்லியன் டாலர்களாக இருந்தன.

இந்த மதிப்பு 2018-19ம் ஆண்டில் $12.75 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு மொத்த உற்பத்தி 2.8 விழுக்காட்டினை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலகட்டத்தில் சிங்கப்பூரில் வெளிநாட்டு நேரடி முதலீடு $6.2 பில்லியன் டாலராகவும், மொரிஷியசுக்கான முதலீடு $1.5 பில்லியன் டாலராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story