Top
undefined
Begin typing your search above and press return to search.

எம்.ஜி.ஆரின் உருவம் பொறிக்கப்பட்ட ₹ 5 மற்றும் ₹ 100 நாணயங்கள் வரும் ஜனவரியில் வெளியிடப்படும்

எம்.ஜி.ஆரின் உருவம் பொறிக்கப்பட்ட ₹ 5 மற்றும் ₹ 100 நாணயங்கள் வரும் ஜனவரியில் வெளியிடப்படும்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  29 Aug 2018 7:43 AM GMT

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த ₹100 மற்றும் ₹5 நாணயங்கள் வெளியிடுவதற்கான அரசாணையை மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது.


புதிதாக அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படும் ₹100 மற்றும் ₹5 ஆகிய நாணயங்களின் பின்புறத்தில் எம்.ஜி.ஆர்-ன் உருவம் இடம்பெற்றிருக்கும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அரசாணையில் கூறப்பட்டிருந்தது.


தொடர்ந்து தற்போது, எம்.ஜி.ஆரின் உருவம் பொறிக்கப்பட்ட ₹ 5 மற்றும் ₹ 100 நாணயங்கள் வரும் ஜனவரியில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


சென்னையில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொள்ள முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story