Top
undefined
Begin typing your search above and press return to search.

பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தொலை நோக்குத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தொலை நோக்குத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  28 Aug 2018 7:31 PM GMT


பேரிடர் காலங்களில் பாதிப்புகளை கண்காணிக்கவும், மீட்பு பணிகளை தீவிரப்படுத்தவும் , முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம்  அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்படுள்ள உத்தரவில் இந்த ஆணையத்தின் தலைவராக முதலமைச்சர் இருப்பார் என்றும்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை, நிதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர்கள், வருவாய் நிர்வாக ஆணையர், அண்ணா பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மை மைய இயக்குநர், ஐ.ஐ.டி. சிவில் எஞ்சினியரிங் துறை தலைவர் ஆகியோர்  உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தொலைநோக்குத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்குத் திட்டத்தில் பேரிடர் பாதிப்புகள் அபாயங்கள் குறித்த மதிப்பீடுகள், தடுப்பு மற்றும் தணிப்பதற்கான நடவடிக்கைகள், சீரமைப்பு, இழப்பீடு, மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகளை திட்டமிடல், நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.
Next Story