Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னையில் கிறிஸ்துவ அனாதை இல்லத்தில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை : பாபு சாமுவேல் உட்பட மூன்று பேர் கைது

சென்னையில் கிறிஸ்துவ அனாதை இல்லத்தில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை : பாபு சாமுவேல் உட்பட மூன்று பேர் கைது

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  28 Aug 2018 7:35 PM GMT

சென்னை அம்பத்தூர் ஐ.சி.எப் காலனியை சேர்ந்தவர் பாபு சாமுவேல். திருமணமான இவர், ஒழுக்கங்கள் சரி இல்லாத காரணத்தால் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது மனைவியால் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. எட்டெர்னல் வேல்டு ட்ரஸ்ட்டின் கீழ் இயங்கி வரும் அனாதை இல்லத்தில் வார்டனாக பணியாற்றி வந்துள்ளார்.


அனாதை இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்கவைப்பாதாக கூறி தனது அறைக்கு அழைத்து குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். முதலில் பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த இவர், பிறகு ஆண் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.



இதனைத் தொடர்ந்து, அனாதை இல்லத்தை பராமரிப்பவர்களான அயினாவரத்தை சேர்ந்த பாஸ்கர் (39) மற்றும் திருமுல்லைவாயிலை சேர்ந்த முத்து (27) ஆகியோர்களையும் அழைத்து, அவர்களாலும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு அனுமதித்துள்ளார் பாபு சாமுவேல்.



பிறகு அம்பத்தூர் ஐ.சி.எப் காலனியில் பாபு சாமுவேலை கைது செய்த காவல்துறையினர்,  எட்டெர்னல் வேல்டு ட்ரஸ்ட்டை நடத்தி வரும் வில்லிவாகத்தை சேர்ந்த ஜாக்கப் (64) மற்றும் விமலா ஜாக்கப் (59) ஆகியோரையும் கைது செய்ததாக டெக்கான் க்ரானிக்கள் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.



கடந்த சனிக்கிழமை 26 பெண் குழந்தைகள் மருத்துவ பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனார். மீதம் உள்ள 20 ஆண் குழந்தைகள் திங்களன்று மருத்துவ பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.



திருமுல்லைவாயிலில் சட்ட விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டபோது பாதிக்கப்பட்ட குழந்தைகள் நீதிபதிகளிடமும் காவல் துறையினரிடமும் நடந்ததை கூறிய பின்பு இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

Next Story