Top
undefined
Begin typing your search above and press return to search.

பர்தா அணிந்த பெண்ணால் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட இஸ்லாமிய இமாம் : திருவல்லிக்கேணியில் பரபரப்பு

பர்தா அணிந்த பெண்ணால் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட இஸ்லாமிய இமாம் : திருவல்லிக்கேணியில் பரபரப்பு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  29 Aug 2018 7:37 PM GMT

திருவல்லிக்கேணியில் இஸ்லாமிய இமாம் மீது , பர்தா அணிந்த பெண் ஒருவர், எரியும் திரவத்தை ஊற்றி தீவைத்து கொலை செய்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பர்தா அணிந்து வந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பென்சினஸ் முதல் தெருவில் வசித்து வந்தவர் சையத் பஸ்ருதின் (எ) பாபு பாய் (62). இவர் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் கீழ் தளத்தில் மந்திரம் ஓதும் இமாமாக இருந்து வந்தார்.




தங்களது பிரச்சினைகளுக்காக வருபவர்களுக்கு அவர்கள் பிரச்சினைக்காக பாத்தியா ஓதி தாயத்து தருவது, மந்திரிப்பது, அவர்களுக்கு பலன் சொல்வது உள்ளிட்ட வேலைகள் செய்து வந்தார். இதற்காக சிறு தொகை வாங்குவது அவரது வழக்கம். அவரைப் பார்க்க ஆண், பெண் இஸ்லாமியர்கள் வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்றிரவு சையத் பஸ்ரூதின் திருவல்லிக்கேணியில் உள்ள தனது இடத்தில் இருந்த போது அவரைப் பார்க்க பர்தா அணிந்த ஒரு பெண் வந்தார். அவரிடம் பேசியபடி திடீரென தான் கொண்டு வந்த எரி திரவம் ஒன்றை அவரது தலையில் ஊற்றி தீ வைத்தார். சையத் பஸ்ருத்தீன் சுதாரிப்பதற்குள் அவரது தலை, முகம் முழுதும் தீப்பற்றிக்கொண்டது.
அவர் கீழே உருண்டு புரண்டார், இந்த நேரத்தில் பர்தா அணிந்து வந்த அந்த நபர் ஓடிவிட்டார். பஸ்ருத்தீனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சையத் பஸ்ருதீன் உயிரிழந்தார்.
சையத் பஸ்ருத்தீன் எரிக்கப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொல்லப்பட்ட சையத் பஸ்ரூதின் மீது ஊற்றப்பபட்டது என்ன என்பது பற்றி தடய அறிவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்துள்ளனர்.
கொலை நடந்த திருவல்லிக்கேணி வணிக வளாக பகுதியின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
பர்தா அணிந்த பெண்ணால் இஸ்லாமிய இமாம் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டிருப்பது திருவல்லிக்கேணி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story